பெண்களுக்கு எதிரான கொடுமைகள் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. என்னதான் நாகரீகம், தொழில்நுட்பம் என்று வளர்ந்தாலும் இன்னமும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை நாம் அடிக்கடி பார்த்துக் கொண்டுதான் இருரக்கிறோம். அதிகம் படித்த சமூகத்தினர் இருக்கும் சமூக வலைத்தளத்தில் கூட பெண்களுக்கு எதிரான ஆபாசக் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் விசுவாசம் புகழ் அனிகாவின் புகைப்படத்திற்கு மோசமாக கருத்து தெரிவித்திருந்த நெட்டிசன் ஒருவரை பிக் பாஸ் அபிராமி வறுத்தெடுத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட் செய்திருந்த இன்ஸ்டாகிராம் வாசி. ஒருவர் நீங்கள் மிகவும் ஹாட்டாகவும், செக்ஸியாக இருக்கிறீர்கள், ஐ லவ் யூ என்று கமெண்ட் செய்திருந்தார். சிறிய பெண் என்றும் பாராமல் இப்படி ஒரு கமெண்ட்டை செய்ததால் அந்த ரசிகரை பலரும் வறுத்து எடுத்து வந்தார்கள்.
மேலும் பிரபல யூடியூப் புகழ் பிலிப் பிலிப் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அனிகாவின் புகைப்படத்திற்கு மோசமாக கமெண்ட் செய்திருந்த நம்பருக்கு போன் செய்து உங்கள் மீது போஸ்கோ சட்டம் போட முடியும் என்று மிரட்டி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோவை நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்
.
அதில் அபிராமி குறிப்பிட்டுள்ளதாவது கண்டிப்பாக இது போல அனைத்து சைபர் புல்லிஸ் (அதாவது சமூகவலைதளத்தில் அவதூராக பேசுபவர்கள் ) தண்டிக்கப்பட வேண்டும். மேலும், இது போன்ற நபர்களின் விவரங்களை ஐபி அட்ரஸ் மூலமாக கண்டுபிடிக்க முடியும். குழந்தையை கூட விட்டு வைக்காத இது போன்ற நபர்களை பார்க்க அசிங்கமாக இருக்கிறது. இவர்கள் நம்மை பற்றி பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.