என் அம்மா வாழ்க்கையை பற்றி கற்றுக்கொடுக்கவே எனக்கு முன்னால் ஒரு அக்காவை பெற்றார் – அபிஷேக் பகிர்ந்த புகைப்படம்.

0
844
abhishek
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு பரிச்சயமானவர் யூடியூப் பிரபலம் அபிஷேக் ராஜா. இவர் யூடியூபில் விமர்சனம் செய்ததன் மூலம் பல பேரிடம் மொக்கை வாங்கி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள். ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருக்கிறார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

வைல்ட் கார்டாக வந்த அபிஷேக் :

பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார். மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று பிரியங்காவுடன் தேவையில்லாமல் வேலைகளை செய்து கடந்த வாரம் நடந்த எழிமினேஷனில் அபிஷேக் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்களை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

நானும் மனிதன் தான் :

அதே போல இரண்டாம் முறை வெளியேறிய போது, பிரியங்காவிடம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூஞ்சை மாற்றினால் மக்களுக்கு பிடிக்குமா? என்று கூறி இருந்தார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் பொதுமக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. நானும் மனிதன் தான். எனக்கும் வலி வேதனை எல்லாம் இருக்கு. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

அபிஷேக் கடந்து வந்த பாதை :

அபிஷேக் எது பண்ணாலும் தப்பு என்று ஒரு பக்கம் மக்களால் பார்க்கப்படுவதால் தான் இந்த பிரச்சனை. ஆனால், இது உண்மை கிடையாது’ என்று கூறி இருந்தார். அதே போல பிக்பாஸ் ஆரம்பித்த சில நாட்களில் கடந்துவந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பேசிய அபிஷேக் ராஜா தன்னுடைய தந்தையின் மறைவு குறித்தும் அதன் பின் தன் வாழ்வில் அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்தும் பேசியிருந்தார்.

அபிஷேக்கின் அக்கா :

மேலும், தனக்கு ஒரு அக்கா இருக்கிறார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் அக்காவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கும் அபிஷேக் ராஜா ‘என் அம்மா எனக்கு வாழ்க்கையை பற்றி கற்றுக்கொடுக்கவே எனக்கு முன்னால் ஒரு அக்காவை பெற்றார்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement