பிரதீப்பிற்கு red card தூக்கியது குறித்து ஐசு கூறியிருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. இதனால் மற்ற போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும், சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.
அதோடு ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ், பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது. இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள்.ஆனால், கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள்.
இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர நேர நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. மேலும், பிரதீப் வெளியேறிய பின்னர் பிரதீப்பிற்கு எதிராக மாயா&கோ செய்த சதி வேலைகள் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் ஐசு, பிரதீப்பிற்கு எதிராக ரெட் கார்ட் தூக்கியதற்க்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரதீப்பிற்கு எத்தனையோ பேர் red card கொடுத்தாலும் ஐசு red card தூக்கியது தான் பிரதீப் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு முக்கிய காரணம் பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை அவருடன் அடிக்கடி தனியாக அமர்ந்து பேசி இருந்தார் ஐசு. மேலும், ஒரு கட்டத்தில் நிக்சனை வெறுப்பேற்ற பிரதீப்பை கட்டிப்பிடித்து கூட இருந்தார். மேலும், பிரதீப் உள்ளே இருந்த வரை அவருடன் ஜாலியாகவே பழகி வந்தார்.
இதனால் ஐசு, பிரதீப்பை முதுகில் குத்திவிட்டார் என்று பிரதீப் ரசிகர்கள் பலர் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த ஐசு முதன் முறையாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தான் விளையாடிய விளையாட்டை நினைத்தால் தனக்கே அசிங்கமாக இருக்கிறது. என்னை நினைத்தால் எனக்கே கேவலமாக இருக்கிறது. அன்பு, பொறுமை, கோபம் எல்லாம் என் கண்னை மறைத்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மேலும், நான் தவறு செய்தா போதெல்லாம் என்னை காப்பாற்றிய யுகேந்திரன் சார், விச்சுமா, பிரதீப், அர்ச்சனா மற்றும் மணி அண்ணா ஆகியோருக்கு என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.பிரதீப்பிற்கு எதிராக நான் ரெக்கார்ட் தூக்கியதற்கு என்னுடைய மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். உன்னுடைய நோக்கத்தை நான் நன்றாக புரிந்து கொண்டிருக்க வேண்டும். நான் உன்னை ஏமாற்றி இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.