குடும்ப மானம் போகுது, அவளை வெளியில் அனுப்பிடுங்க – பிக் பாஸ் செட்டுக்கே சென்றுள்ள ஐசு குடும்பத்தினர்

0
423
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் மணி – ரவீனா தான் காதல் ஜோடி என்று கிசு கிசுக்கப்பட்டு இருந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் – ஐசு தான். ஆரம்பத்தில் இருவரும் நன்றாக தான் பழகி வந்தார்கள். முதலில் ஐஷு மணி இடம் நெருக்கமாக பழக முயற்சித்தார். ஆனால், ரவீனா எப்போதும் மணியுடன் சுற்றி கொண்டு இருந்ததால் நிக்சனிடம் பழக ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

பின் இருவரும் அதிக நேரம் பேசி பழக ஆரம்பித்தார்கள். எங்கு பார்த்தாலும் நிக்சன்- ஐசு உட்கார்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஐசு தன்னுடைய கையில் என் எக்ஸ் என் என்று நிக்சன் பெயரை பதிவிட்டு இருக்கிறார். பின் நிக்சன் ஐசு வரும்போது ஹார்ட் சிம்ப்ளை வரைந்து காண்பித்திருக்கிறார். இதெல்லாம் தாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிக்சன் மற்றும் ஐசு ஆகிய இருவரும் அமர்ந்து மைக்கை கழட்டி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது இருவரும் பேசிக்கொள்வது போல கண்ணாடியில் முத்தம் குடுத்தனர்.

- Advertisement -

நிக்சன்-ஐஷு முத்தம் சர்ச்சை:

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாக பரவி வரும் நிலையில் இவர்கள் இருவரின் செயலை குறித்து கழுவி ஊற்றி இருக்கிறார்கள். அதன் பின் இவர்கள் இருவரும் கேமராவிற்கு தெரியாத வண்ணம் தனியாக அமர்ந்துகொண்டு பேசி இருகின்றனர். அப்போது இச்சி இச்சு என்று சத்தம் கேட்க இருவரும் முத்தம் கொடுத்துவிட்டார்களா என்ற சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர். முதல் சீசனில் ஆரவ்- ஓவியாவின் மருத்துவம் போல் இந்த ஏழாவது சீசனில் நிக்சன்-ஐஷு மிரர் முத்தம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு வந்த ஐஷு பெற்றோர்கள்:

இது குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களுடைய இந்த மொத்த விவகாரம் ஐசுவின் பெற்றோர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐஷு பெற்றோர்கள் சில தினங்களுக்கு முன் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து நிகழ்ச்சி நடத்துபவர்கள் கூறியது, ஐசு பெற்றவர்கள் பிக் பாஸ் செட்டிற்கு வந்தது உண்மைதான். கண்ணாடி வழி அவர்கள் இரண்டு பேரும் முத்தத்தை பரிமாறிக் கொண்ட எபிசோடை பார்த்தவர்கள் ரொம்பவே மனமுடைந்து போய்விட்டார்கள்.

-விளம்பரம்-

மனவேதனையில் ஐஷு பெற்றோர்கள்:

குடும்ப மானம் போகுது. இனி ஒரு நாள் கூட ஐஷு இந்த நிகழ்ச்சியில் இருக்கக் கூடாது என்றும், தயவுசெய்து அவளை வெளியே அனுப்பிவிடுங்கள் என்றும் ஆக்ரோஷமாக நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள். பின் சேனல் தரப்பில் இருந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் எமர்ஜென்சி ஆன காரணம் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர்களை கூட்டிட்டு போக முடியாது. நீங்கள் கிளம்புங்கள் நாங்கள் அவர்களிடம் பேசிக் கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அப்போவும் கேட்காமல் ஐசுவின் பெற்றோர்கள் அடம்பிடித்து இருக்கிறார்கள்.

ஐஷு நண்பர்கள் கூறியது:

ஐசுவிடம் நீங்கள் சொன்னது போல் நாங்கள் எச்சரிக்கிறோம் என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை அனுப்பி விட்டார்கள். ஐசுவிடம் இந்த தகவல் வந்து சேர்வதற்கு முன்பே நிக்சன்-ஐஷு கண்ணாடியெல்லாம் தாண்டி நேரடியாகவே முத்தம் கொடுத்திருப்பதாக சில வீடியோக்கள் வெளியாகியிருக்கிறது. இது ஐசு பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்திருக்கிறது. இதை அடுத்து ஐசுவின் நெருங்கிய நண்பர்கள், எங்களுக்கு என்னவோ இது சந்தேகமாக இருக்கிறது. நல்லா தான் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென்று எப்படி இப்படி நடந்து கொள்ளுவாள். அமீர் பாவனியும் நிறைய டிப்ஸ் கொடுத்து தான் அனுப்பி இருந்தார்கள். அதனால் கூட இவர் தங்களுக்கு கடுமையான போட்டியாளராக வந்து விடுவார் என்று அவளை திசை திருப்பிக் கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement