‘விஜய் டிவி நிகழ்ச்சியின் ஒரே மேடையில் அக்ஷரா – பாவனி – பிரியங்கா’ இது நாள் வரை இதை பார்த்துளீர்களா ?

0
296
akshara
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 82 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் போட்டிகளும், சவால்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றுக் கொண்டே செல்கிறது. இதனால் போட்டியாளர்களுக்குள் கலவரம் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 10 பேர் வெளியேறி இன்னும் 10 பேர் உள்ளே இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான போட்டியாளர்களை விட பரிட்சயமில்லாதா போட்டியாளர்கள் தான் அதிகம் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

மாடல் அழகி To பிக் பாஸ் :

அதில் அக்ஷராவும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத முகம் தான். மாடல் அழகியான இவர் பல்வேரு அழகி பட்டங்களை வென்று இருக்கிறார். அதே போல கடந்து வந்த பாதை டாஸ்கில் பேசிய அக்ஷரா, நிகழ்ச்சியில் தான் என்னுடைய கம்போர்ட் சோணை விட்டு வெளியில் வந்து யார் என்று தெரியாத நபர்களுடன் இருப்பது யாராவது, என்னை பிடிக்கவில்லை முகத்திற்கு நேராக சொல்வது, இதையெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக இங்கு தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

பிரியங்கா – பாவனி – அக்ஷரா :

ஆனால், இவர் ஏற்கனவே ரியாலிட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார் அக்ஷரா. இதற்கெல்லாம் மேலாக இந்த நிகழ்ச்சியை முதல் நாளில் தொகுத்து வழங்கி இருந்தது பிரியங்கா மற்றும் ஆண்ரூவ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூங்கொத்து கொடுத்த பாவனி :

மேலும், இந்த நிகழ்ச்சியின் அறிமுக நாளில் அக்ஷராவை அறிமுகம் செய்துவ வைத்த போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது சின்னத்தம்பி சீரியலில் நடித்து வந்த பிரஜின் – பாவனி தான். இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா கலந்துகொண்ட முதல் நாளில் பாவனி, அக்ஷராவிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

பெயரை மாற்றிய அக்ஷரா :

அக்ஷரா ‘happy newyear’ என்ற ஷார்ட் பிலிமில் கூட நடித்து உள்ளார். அந்த ஷாட் பிலிமில் லிப் லாக் காட்சியில் கூட நடித்து இருக்கிறார். மேலும், இவரது உண்மையான பெயர் shravya sudhakar. இவர் 2013 ஆம் ஆண்டு கேரள தங்க கடத்தல் விவாகரத்தில் கூட தொடர்பு இருப்பதாக இவரிடம் விசாரணை கூட நடந்தது. ஆனால், தங்க கடத்தலில் ஈடுபட்ட பயாஸ் என்பவரை என் நண்பர்களின் மூலம் எனக்கு தெரியும்.

அக்ஷரா நடித்த படம் :

ஆனால் எனக்கும் இந்த தங்க கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், தான் நடித்த படங்கள் குறித்தோ பெயர் மாற்றியது குறித்தோ அக்ஷரா இது வரை வாய் திறந்தது இல்லை. மேலும், இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ‘தீண்ட தீண்ட’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து இருக்கிறார். ஆனால், அந்த படத்தில் Shravya என்ற பெயரில் தான் நடித்துள்ளார் அக்ஷரா என்பது கூறிப்பிடதக்கது.

Advertisement