பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இந்த சீசனில் தெரிந்த முகங்களை விடை தெரியாத முகங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் அடக்கம். இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், அமீர் ரசிகர்களுக்கு புதிய முகம் தான்.

அமீர் கடந்து வந்த பாதை :
இவர் வந்த ஒரு சில நாட்களில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் சரியான பேசுகிறார் என்ற கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இவரது பெயர் செம டேமேஜ் ஆகி இருக்கிறது. கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கி இருப்பார்கள். அதுவும் அம்மாவின் உடலை அடக்கம் செய்ய கூட காசு இல்லாமல் வீட்டில் உள்ள டிவி சோபாவை விற்றேன் என்று அமீர் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் கலங்கியது.
தாய் தந்தையை இழப்பு :
அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட காரணத்தை மட்டும் வேண்டாம் என்று மறைத்து விட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன்னுடைய வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இருளாக இவரை சூழ்ந்து இருக்கிறது.
அமீருக்கு ஆதரவளித்த குடும்பம் :
தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை துவங்கி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா என்று கூறி இருந்த அமீர் அந்த குட்டி பெண்கள் தான் என் வாழ்க்கை மாற்றினார்கள் என்பதும் அவர்களின் அம்மா ஷைஜி மேம் தான் எனக்கு எல்லாமுமாக இருக்க போகிறார் என்று எனக்கு தெரியாது. அதன் பின்னர் அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்று தனக்கு சோறு போட்டு வளர்த்ததாக கூறியிருந்தார்.
மதம் மாறிய அமீர் :
மேலும், அவர்கள் வீட்டில் தான் முட்டை, கறி என்பதையே பார்த்தேன். மேலும், நான் கிறிஸ்டியனாக இருந்தேன். அவர்களுக்காக தான் நான் முஸ்லிமாக மாறினேன். நான் அவர்கள் வீட்டிள் இருப்பதால் அஷ்ரப் – ஷைஜி இருவரையும் அவர்களின் குடும்பத்தார் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் என்னை அவர்கள் வெளியில் போ என்று சொன்னது இல்லை என்று கூறி இருந்தார்.
ஜோடி நிகழ்ச்சியில் அமீர் குடும்பம் :
இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் Freeze டாஸ்க்கின் போது அமீரை பார்க்க ஷைஜி, அலேனா, சயீஷா ஆகியோர் வந்து இருந்தனர். அப்போது இவர்கள் அனைவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இருந்தனர். இந்த நிலையில் அமீர், சயீஷா, ஷைஜி ஆகிய மூவரும் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.