பிக் பாஸ் போய்ட்டு வந்ததால எனக்கு பட வாய்ப்புகள் அமைந்துவிடவில்லை – வெளிப்படையாக பேசிய சீசன் 4 போட்டியாளர்.

0
557
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ஐந்தாவது சீஸனும் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் சீசன் 4 :

இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் இருந்தனர். அதில் சனம் ஷெட்டியும் ஒருவர். அதே போல மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மக்கள் மனதை வென்ற சனம் :

சனம் ஷெட்டி வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே பட வாய்ப்புகள் வரும் என்று நம்பி தான் பலரும் செல்கின்றனர். ஆனால், அப்படி அனைவர்க்கும் அமைந்துவிடுவது இல்லை. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை.

25 படங்களில் நடித்துள்ள சனம் :

அதே போல சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, தான் இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன் ஆனால், எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார் சனம். இப்படி ஒரு நிலையில் இவர் 2017 ஆம் ஆண்டு டிக்கெட் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் ப்ரோமோ சமீபத்தில் தான் வெளியானது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார் சனம்ஷெட்டி

-விளம்பரம்-

பிக் பாஸுக்கு பின் பட வாய்ப்பு :

அப்போது பத்திரிகையாளர் ஒருவர், பிக்பாஸில் பங்கேற்ற பின்னர் உங்கள் வாழ்க்கை எந்த அளவிற்கு மாறி இருக்கிறது என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி ‘என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் தான் சொல்ல முடியும் மற்றவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததால் நிறைய படவாய்ப்புகள் வருகிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.

பிக்பாஸினால் எந்த ஒரு பயனும் கிடையாது :

ஒரு படத்தை எடுத்துக்கொண்டால் அதில் கதை நன்றாக அமைய வேண்டும் உங்களின் கதாபாத்திரம் வலுவானதாக இருக்க வேண்டும் மேலும் அந்த படம் பலமாக வெற்றியடைய வேண்டும் அப்போது தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் வரும் என்பதுதான் உண்மை அப்படி ஒரு விஷயத்தை ஒரு நடிகர் உருவாக்கினால் தான் உங்களுக்கு வாய்ப்புகள் வரும். ஆனால் பிக்பாஸினால் எந்த ஒரு பயனும் கிடையாது என்பது தான் உண்மை

Advertisement