திரைப்படத்தில் Cameo ரோலில் வந்து சென்றுள்ள பிக் பாஸ் அமீர், எந்த படத்தில் பாருங்க – இதோ வீடியோ.

0
723
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் Ticket To Finale டாஸ்க்கை வென்ற முதல் வைல்டு கார்டு போட்டியாளர் அமீர் தான் என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-260-1024x700.jpg

அமீர் ரசிகர்களுக்கு புதிய முகம் தான். இவர் வந்த ஒரு சில நாட்களில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் சரியான பேசுகிறார் என்ற கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், உள்ளே சென்ற சில நாட்களில் பாவனி பின்னால் சுற்றிகொனண்டு லவ் செய்வதாக கூறி ஜொள்ளு விட்டு வந்தார். இதனால் இவரது பெயர் கடுமையாக டேமேஜ் ஆனது. இருப்பினும் தற்போது இவர் இறுதி போட்டி வரை சென்று இருக்கிறார்.

- Advertisement -

சிறு வயதிலேயே அமீர் வாழ்வில் நடத்த கொடுமை :

கடந்து வந்த பாதை டாஸ்கில் அமீர் பேசிய கதையை கேட்டு பலரும் கலங்கி இருப்பார்கள். அதுவும் அம்மாவின் உடலை அடக்கம் செய்ய கூட காசு இல்லாமல் வீட்டில் உள்ள டிவி சோபாவை விற்றேன் என்று அமீர் சொன்ன போது அனைவரின் நெஞ்சும் கலங்கியது. அமீரின் தந்தை இவர் 1வயது இருக்கும் போதே இறந்துவிட்டார், பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார்.

அமீர் வாழ்கையை மாற்றிய குட்டி பெண்கள் :

ஆனால், அவர் கொலை செய்யப்பட்ட காரணத்தை மட்டும் வேண்டாம் என்று மறைத்து விட்டார். தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை துவங்கி இருக்கிறார். அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா என்று கூறி இருந்த அமீர் அந்த குட்டி பெண்கள் தான் என் வாழ்க்கை மாற்றினார்கள் என்பதும் அவர்களின் அம்மா ஷைஜி மேம் தான் எனக்கு எல்லாமுமாக இருக்க போகிறார் என்று எனக்கு தெரியாது.

-விளம்பரம்-

அமீரை தத்தெடுத்த அஷ்ரப் – ஷைஜி :

அதன் பின்னர் அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து சென்று தனக்கு சோறு போட்டு வளர்த்ததாக கூறியிருந்தார். மேலும், அவர்கள் வீட்டில் தான் முட்டை, கறி என்பதையே பார்த்தேன். மேலும், நான் கிறிஸ்டியனாக இருந்தேன். அவர்களுக்காக தான் நான் முஸ்லிமாக மாறினேன். நான் அவர்கள் வீட்டிள் இருப்பதால் அஷ்ரப் – ஷைஜி இருவரையும் அவர்களின் குடும்பத்தார் ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.

படத்தில் தோன்றி இருக்கும் அமீர் :

ஆனாலும், அவர்கள் என்னை அவர்கள் வெளியில் போ என்று சொன்னது இல்லை என்று கூறி இருந்தார். அமீருக்கு பிரபு தேவா போல ஒரு பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. அதே போல இவர், சாருஹாசன் நடிப்பில் ‘தாதா87’ படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், அந்த பாடலில் ஒரு சிறு காட்சியிலும் தோன்றி இருக்கிறார். அந்த பாடலின் வீடியோ இதோ.

Advertisement