இவர் போன்ற பெண்களே தமிழ்நாட்டின் அடையாளம் – பாராட்டிய மூடர் கூடம் நவீன், ரஞ்சித்தின் ரியாக்ஷன்.

0
42424
anitha
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்க்கின் போது சுரேஷ் சக்ரவத்தி எதார்த்தமாக சுமங்கலி யாராவது வந்து விளக்கேட்ருங்கள் என்று கூறி இருந்தார்.ஆனால், சிறிது நேரம் கழித்து பேசிய அனிதா, கணவர் இறந்துவிட்டால் வித்தியாசமாக பார்க்கும் பழக்கம் இன்னும் கிராமங்களில் ஒரு சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு ஒரு உதாரணமாக இன்றைக்கு நான் பார்த்தேன், சுரேஷ் சார் சுமங்கலி யாராவது இருக்கிறீர்களா என்று என்னை அழைத்தது சந்தோஷம். ஆனால், ஒருவேளை நான் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கணவரை இழந்த பெண்கள் இருந்திருந்தால் அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று நான் யோசித்து பார்க்கிறேன்.

-விளம்பரம்-

இது போன்ற விஷயங்களை கிராமங்களில் இன்னமும் பின்தொடர்ந்து வருவதை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இப்போதும் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் சுமங்கலி யாராவது இருக்கிறீர்கள் வந்து ஆரம்பித்து வையுங்கள் என்று தான் சொல்வார்கள். அது சென்னையில் மிகவும் கம்மியாக இருக்கிறது என்றுகூறிய அனிதா, தன்னுடைய திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றியும் ஒரு இருந்தார். பின்னர் இறுதியில் சுமங்கலி, அமங்கலி என்றெல்லாம் கிடையாது, யார் ஆரம்பித்தாலும் ஒரு நிகழ்ச்சி நன்றாக தான் இருக்கும் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

ஆனால், அனிதா சொன்ன இந்த விஷயம் சுரேஷ் உட்பட பலரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.ஒரு நல்ல நாளில் இப்படி எல்லாம் பேச வேண்டுமா என்று பலரும் வருத்தப்பட்டனர். அதே போல சுரேஷ் கூட, அந்த பெண் வேண்டுமென்றெ என் பெயரை கெடுக்க இப்படி பேசுகிறது. இது ஒரு மிகப்பெரிய கெட்ட பெயரை எனக்கு ஏற்படுத்திவிடும் என்று கூறி இருந்தார். மேலும், நிஷா, ரியோ, அர்ச்சனா என்று பலரும் அனிதா சொன்னது தவறு என்று அவருக்கு அறிவுறுத்தினர். பின்னர் தான் செய்தது தவறு என்று சுரேஷிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், சுரேஷ் அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அனிதா சம்பத் பாத் ரூமில் கதவை சாத்திக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார். இப்படி ஒரு நிலையில் இந்த விஷயத்தில் அனிதா சம்பத்திற்கு ஆதரவாக பேசி கைதட்டி பாராட்டி இருந்தார் கமல்.

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்தை பாராட்டி இருக்கிறார் மூடர் கூடம் நவீன். ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றளவும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. பிக் பாக்கெட் அடிப்பவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் ஆனந்தி.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் அனிதா சம்பத்தின் சுமங்கலி கருத்திற்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ” என்று பதிவிடுள்ளார். நவீனின் இந்த டீவீட்டை பிரபல இயக்குனர் ரஞ்சீத்தும் லைக் செய்துள்ளார்.

Advertisement