ஒரு காலத்தில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் அனுயா. இவர் துபாயில் பிறந்தவர். பூனேவில் இவர் தன்னுடைய படிப்பை முடித்து இருக்கிறார். பிறகு 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்தி படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதற்குப் பிறகு அனுயா தமிழில் 2009 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் அனுயாவுக்கு தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்தது. அதற்குப் பிறகு அனுயா நிறைய படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. மேலும், கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றவுடன் அனுயா துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை மறந்த நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தி இருந்தது.
நடிகை அனுயா திரைப்பயணம்:
பிரபல லீக்ஸ் பாடகியான சுசித்ராவின் பெயரில் வெளியான சுசி லீக்சில் அனுயா ஆபாச படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இவரை கூகுளில் ரசிகர்கள் மீண்டும் தேட தொடங்கி இருந்தார்கள். இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு முதல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டார். பின் இவர் சில வெப் தொடரில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அனுயா:
அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதன் பின்னர் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் பல நடிகர்களுடன் ரகசியமாக உறவில் இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வந்திருக்கிறது. சமீபத்தில் கூட அனுயா நடித்திருந்த சிவா மனசுல சக்தி படம் ரீரிலிஸ் செய்யப்பட்டு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகை அனுயா குறித்த சர்ச்சை:
இந்த நிலையில் நடிகை அனுயா தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு பின்னணி பாடகி சுசித்ராவின் சோசியல் மீடியா பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்திருந்தார்கள். அதில் நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச வீடியோ வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அனுயா சமீபத்தில் அளித்த பேட்டியில், சில வருடங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி மாஃபிக் வீடியோ வெளியாகியிருந்தது.
நடிகை அனுயா அளித்த பேட்டி:
இதனால் நான் ரொம்ப மன வேதனைக்கு ஆளாகி இருந்தேன். அந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று கூட எனக்கு தெரியவில்லை. இதனால் அந்த சமயத்தில் நான் தற்கொலை செய்து கொள்ள யோசித்தேன். ஆனால், என்னுடைய அந்த எண்ணத்தை மாற்றியது என்னுடைய குடும்பம் தான். அவர்கள் என்னுடன் அந்த சமயத்தில் இல்லை என்றால் நான் இந்த நேரம் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். என் குடும்பம் தான் என்னை புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்று கூறி இருக்கிறார்.