சத்துரு கொடுத்த ஸ்பெசல் பெர்மிஷன், ஓகே சொன்ன சீமான் – டாப் கீரில் தூக்கும் விக்னேஷ் சிவன்

0
419
- Advertisement -

சத்தம் இல்லாமல் தொடங்கி இருக்கும் விக்னேஷ் சிவன் இயக்கும் புது படத்தின் அப்டேட் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர். கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதை அடுத்து விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கான வேலைகளை விக்னேஷ் சிவன் செய்து இருந்தார். ஆனால், படத்தினுடைய ஒன் லைன் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்றவுடன் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான எல்ஐசி என்ற படத்தை எடுக்கிறார்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் திரைப்பயணம்:

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க வைக்கிறார். மேலும், இந்த படத்தை நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. பின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து விலகி விட்டது. பின் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

எல்ஐசி படம்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. பின் இந்த எல்ஐசி படத்தின் பெயர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. அதன் பின் விக்னேஷ் சிவன் படக்குழுவுக்கு எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் விக்னேஷ் சிவன் அவர்கள் சத்தமே இல்லாமல் சத்குரு ஜக்கி வாசுதேவ் இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்திற்கு தன்னுடைய படக்குழுவினருடன் சென்று இருக்கிறார். அங்கு ஏழு நாட்கள் சூட்டிங் நடந்திருக்கிறது.

-விளம்பரம்-

படப்பிடிப்பில் சீமான் :

மேலும், இந்த படத்தில் சீமான் நடிக்கிறார். இவர் பிரதிபின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படப்பிடிப்பில் சீமானும் கலந்து இருக்கிறார். இவருடைய நடிப்பை பார்த்து மொத்த யூனிட்டுமே பாராட்டி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். மேலும், படபிடிப்பு முடிந்த பிறகு சீமான் ஆசிரமம் முழுவதும் சுற்றி பார்த்து அங்கிருக்க மக்களிடம் எல்லாம் பேசி இருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அடுத்த மாதம் மீண்டும் இந்த ஆசிரமத்திலேயே படபிடிப்பு நடப்பதால் மறுபடியும் மொத்த யூனிட்டும் வர இருக்கிறார்கள்.

ஆசிரமம் குறித்த தகவல்:

அப்போது ஜக்கி வாசுதேவ்- சீமான் சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை சினிமாவிற்கான படப்பிடிப்பு இந்த ஆசிரமத்தில் நடந்ததே இல்லை. முதல் முதலில் ஆசிரம நிர்வாகிகள் அனுமதி கொடுத்தது ஆச்சரியம் என்று சொல்லலாம். ஏற்கனவே கங்கன ரணாவத் அனுமதி ஆஸ்ரமத்தில் படபிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தார். ஆனால், கொடுக்கவில்லை. விக்னேஷ் சிவனுக்கு கொடுத்தது ஒரு அதிர்ஷ்டம் தான். படக் குழுவினருக்கு எந்த பிரச்சினையும் வராத அளவிற்கு யூனிட் நல்லபடியாக ஷூட்டிங் முடிந்தது.

Advertisement