திருமணத்தின் போது அறந்தாங்கி நிஷா எப்படி இருந்துள்ளார் பாருங்க – வீடியோ இதோ.

0
1030
aranthangi
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்த சீசனில் ஒருசில விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். தற்போது பிக் பாஸ் வீட்டில் அறந்தாங்கி நிஷா தான அனைவரின் பேவரட் ஆக இருந்து வருகிறார். அதுபோக இவரது நக்கல் நையாண்டிகள் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் இவருக்கு கிடைத்து வருகிறது.

-விளம்பரம்-
View this post on Instagram

Throwback !!! Follow @aranthanginisha.offl

A post shared by Aranthangi Nisha (@aranthanginisha.offl) on

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

- Advertisement -

நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நிஷா. அப்போது தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது.பின் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வந்த பாதை டாஸ்கின் போது அறந்தாங்கி நிஷா தனது நிறம் குறித்து இருந்த விமர்சனங்களை தாண்டி தனது வாழ்வில் செய்த சாதனைகளைப் பற்றி கூறியிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

View this post on Instagram

cute family and happy family #myworld #enulagam

A post shared by Aranthangi Nisha (@aranthangi_nisha) on

இப்படி ஒரு நிலையில் அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல அறந்தாங்கி நிஷாவின் திருமணம் காதல் திருமணம் தான் இவரது வளர்ச்சிக்கு இவரது கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார் என்று அறந்தாங்கி நிஷா பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இது ஒருபுறமிருக்க அறந்தாங்கி நிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இவரது பிறந்தநாளை கேக் வெட்டி போட்டியாளர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement