இந்த வாழ்ந்து கெட்டக் குடும்பத்தில் ஒருவரோ, இருவரோ இறுதிப் போட்டிக்குப் போவார்கள், ஆனால் – அர்ச்சனா லவ் கேங் குறித்து ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு.

0
6934
james
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிங்கர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர், அந்த வகையில் அர்ச்சனாவும் ஒருவர். அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான். அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக தான் இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா குறித்தும் அவரால் அவரது லவ் பேட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை இசையமைப்பாளரும் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதியிட்டுள்ளார். அதில், அன்புத்தாய் உள்ளே வந்து 4 போட்டியாளர்களின் வாழ்க்கையையே அழித்துவிட்டுப் போனார். இந்த வீட்டுக்கு சற்றும் தேவையில்லாத ஒரு போலியான அன்பு வலைக்குள் அவர்களை சிக்கவைத்து, இந்த ஏமாந்தக் கன்றுகளும் அதில் உழன்று தங்கள் அடையாளத்தையும், வாய்ப்பையும் இழந்துபோனார்கள்.

- Advertisement -

இதில், தாயை நாம் குற்றம் சொல்லமுடியாது. அவர் இந்த விளையாட்டும் புரியாமல், தன்னுடைய அராஜக எல்லையையும் உணராமல் பிணற்றிக்கொண்டிருந்தபோது, இந்தப் போட்டியாளர்கள் தாங்கள் எதற்காக அந்த வீட்டுக்குள் வந்திருக்கிறோம், நம் இலக்கு என்ன, அதை எப்படி அடையலாம் என்ற உணர்வெல்லாம் இல்லாமல், ஆளுக்கொரு மடியில் தலைவைத்துப் படுத்து விக்ரமன் படக் கதாபாத்திரங்களாய் மாறிப்போனது இவர்கள் பிழை! இவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லையே. இவர்கள் தவறுக்கு இவர்கள் மட்டுமே பொறுப்பு!

ஒரு தாயும், 4 சேய்களுமாய் சேர்ந்து மொத்தமாய் வீணாய்ப் போனார்கள். இதில் சிக்காமல் இருந்திருந்தால் ரியோவும், சோமும், கேபியும் வலிமையான இறுதிப் போட்டியாளர்களாய் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. இந்த வாழ்ந்து கெட்டக் குடும்பத்தில் ஒருவரோ, இருவரோ இறுதிப் போட்டிக்குப் போவார்கள். என்ன பயன்? போவார்கள்.. அவ்வளவுதான்! என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement