தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
பலர் அர்ச்சனாவுக்கு டைட்டில் கிடைத்ததை கொண்டாடினாலும் சிலர் விமர்சித்தும், இவர் பிஆர் வேலையினால் தான் வெற்றி பெற்றார் என்றெல்லாம் கேலி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முதன்முதலாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா கொடுத்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், எனக்கு 19 கோடி மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றேன் என்று நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. என்னால் நம்பவும் முடியவில்லை ஆச்சரியமாக இருக்கிறது.
அர்ச்சனா பேட்டி:
மக்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். அதேபோல் பலரும் பி ஆர் வேலை பார்த்து நான் வெற்றி பெற்றேன் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஓட்டிற்கு ஒரு ரூபாய் என்று சொன்னாலும் 19 கோடி கொடுத்து தான் நான் வெற்றி பெற்றேனா? 18 கோடி மக்கள் என் மீது பாசம் வைத்திருந்தாலும் ஒரு கோடி கோடி ரூபாய் கொடுத்து நான் வெற்றி பெற்றேன் என்று சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது. அந்த ஒரு கோடி இருந்திருந்தால் நான் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்து நான் கதாநாயகியாக நடித்திருப்பேன்.
pr வேலை குறித்து சொன்னது:
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? பொய்யான வதந்திகள். போற்றுபவர்கள் போற்றட்டும், தூற்றுபவர்கள் தூற்றட்டும் நம்முடைய வேலையை பார்க்கலாம். அதேபோல் நிகழ்ச்சிக்கு வெளியில் என்ன நடக்கிறது எங்களுக்கு தெரியாது. ஒவ்வொரு வாரமும் கமல் சார் வந்து என்ன சொல்கிறார்? என்பதை பார்த்து தான் நாங்கள் விளையாடுவோம். ஒவ்வொருவரும் ஒரு கேமை விளையாடி கொண்டு தான் இருந்தார்கள். நான் என்னுடைய விளையாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்தினேன். இந்த வாரம் முழுக்க நான் என்ன தவறு செய்தேன். கமல் சார் என்ன சொன்னார்? அதை திருத்திக் கொண்டு எப்படி விளையாடினும் என்று என்னுடைய விளையாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்தினேன்.
நிகழ்ச்சி கடைசி வாரம் குறித்து சொன்னது:
அதுவும் நிகழ்ச்சி கடைசி வாரத்தில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். மக்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்தது நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பிறகு நான் இப்போது பெட்டராக செயல்படுகிறேன். அதற்கு முன் எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன், அழுவேன், புலம்புவேன். ஆனால், இப்போது என்னை நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன். மேலும், நிகழ்ச்சியில் பிரதீப்பிற்கு நடந்தது ரொம்ப தவறான ஒன்று. அவர் தவறு செய்தார் என்பதை நிரூபித்த பிறகு தான் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்திருக்க வேண்டும்.
பிரதீப் குறித்து சொன்னது:
அவர் வெளியே வருவதற்கு முன்பு வரை கூல் சுரேஷ்- பிரதீப்பிற்கு நிறைய பிரச்சனை இருந்தது. நான் போனதற்கு கூட அவர் உனக்கு தேவையில்லாத வேலை, உன் வேலையை பார் என்று என்னை ஒதுக்கி விட்டார். மாயா அவர்களுடைய டீம் எல்லாம் கும்பலாக சேர்ந்து பேசும்போதெல்லாம் கூட எனக்கும் விசித்ரா மேடம்க்கும் ஒண்ணுமே புரியவில்லை. எங்களை தனியாக விட்டு தான் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் கூல் சுரேஷ் விஷயத்தைதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்தோம். திடீரென்று உரிமைக் குரல் கொடுத்து பேசும்போது தான் இவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற விஷயத்தை சொல்லி பேசினார்கள். அது முற்றிலும் தவறு. இந்த பெயரை கெடுத்து வெளியே அனுப்பி இருக்கக் கூடாது. அவர் அந்த மாதிரி நபரும் கிடையாது. சூப்பராக விளையாடக் கூடியவர் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.