பிக் பாஸுக்கு பின் அர்ச்சனா எந்த போட்டியாளர்களை சந்தித்துள்ளார் பாருங்க. வைரலாகும் புகைப்படம்.

0
1167
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரங்களை கடந்து 12 வது வாரத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் கடந்த வார நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி,சோம் சேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, இந்த வாரமும் லவ் பேட்டில் இருந்து யாராவது வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதே போல பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வந்த ஓட்டிங்கில் அர்ச்சனாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவானது.இதில் எதிர்பார்த்தது போலவே நேற்றய நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் வெளியேற்றப்பட்டார். சம்யுக்தவிற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் திருப்தியான வெளியேற்றமான அமைந்து இருந்தது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் பிக் பாஸ் வீட்டில் அன்பை ஓவராக பிழிந்ததால் தான்.

- Advertisement -

அதே போல இவர் தனக்கான ஒரு குரூப்பை அமைத்துக் கொண்டு அவர்களையும் பல இடங்களில் விளையாடவிடாமல் தடுத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற போட்டியாளர்களை போல் அல்லாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, தனது குடும்பத்தை பார்க்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக தான் இருந்தார். பிக் பாசில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து கேக் வெட்டி கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

அர்ச்சனா வெளியேறிய 3 நாட்கள் ஆன நிலையில் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்கவில்லை. அதே போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த ஒரு புகைப்படத்தையும் பகிராமல் இருந்து வந்தார் அர்ச்சனா. இப்படி ஒரு அர்ச்சனா, வெளியில் வந்ததும் தன்னுடைய லவ் பேட் குழுவினாரான ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவை சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அர்ச்சனா.

-விளம்பரம்-
Advertisement