அம்மனுக்கு பூஜை செய்து அர்ச்சனா வெளியிட்ட வீடியோ – விமர்சித்தவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி.

0
2235
Archana
- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா அடிக்கடி புகைப்பங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது வீட்டில் வராகி அம்மன் பூஜை செய்து வழிபட்ட விடியோவை இணையத்தில் பதிவு செய்துள்ளார். 90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

- Advertisement -

என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதிலும் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்ததில் இருந்தே இவருக்கு எக்கச்செக்க ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். இவரும் அறந்தாங்கி நிஷவும் பாசப்போராட்டம் என்று டிராமா போட்டதால் பலரின் வெறுப்புக்கு உள்ளாக்கினார்கள். மேலும், இவரது பாத் ரூம் டூர் வீடியோ கூட பெரும் ஹேட்டர்களை உருவாக்கியது.

ஆனால், இந்த வீடியோ அர்ச்சனா சுடதார் அணிந்து பூஜை செய்து இருப்பது தான் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதில் ஒரு நெட்டிசன் ”எத்தனையோ சந்தர்ப்பங்களுக்கு நல்லா சேலை கட்டி போட்டு வெச்சி ஆக்சஸரீஸ் எல்லாம் போட்டு ரெடி ஆறீங்க.. ரீல்ஸ் ஏன் ப்ரோமோஷன்ஸ் கூட அப்டி பாரம்பரியம் ரெடி பண்ணிக்கறீங்க.. சில பூஜை செய்யும் போது ஏன் பண்ணிக்களா.. பொட்டு வெச்சி சேலை கட்டி கைல வளையல் எல்லாம் போட்டிர்க்களாமே’ என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த அர்ச்சனா ‘ ‘சில சமயங்களில் கடவுள் முன், நீங்கள் எப்போதும் போல இருக்கலாம். அவளைக் கவர வேண்டிய அவசியமில்லை. நாம் நாமாகவே இருக்கலாம், எளிமையானது. மேலும் இது பார்க்கும் கண்கள் பொருத்ததே’ என்று கூறியுள்ளார். அதே போல இதே போன்று கமன்ட் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா ‘பூஜா பண்றது பண்ணாம இருக்கறது என் விருப்பம்.

போடவ கற்றதும் கட்டாம இருக்கறதும் என் விருப்பம். கருத்து சொல்றது உங்க விருப்பம். இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் அம்மனின் ஆசிர்வாதத்தை கொடுக்கவே பதிவு செய்தேன். ஆனால், நீங்கள் அனைவரும் என்னுடைய உடையை தான் பார்க்கிறீர்கள். கலாச்சாரத்த துணியுடன் சேர்க்காதீங்க. உங்களுக்கு எப்போதும் வாராகி அம்மனின் ஆசீர்வாதம் கிடக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் அர்ச்சனா வீட்டில் வாராஹி அம்மனுக்கு ஐயரின் உதவியுடன் வீட்டிலேயே பூஜை செய்து அந்தவீடியோவை வெளியிட்டு இருந்தார். மேலும், தனது கனவில் வாராஹி அம்மன் வந்ததாகவும் அதனால் தான் பூஜை செய்ததாகவும் கூறி இருந்தார். சமீப காலமாக தமிழ் நாட்டில் வாராஹி அம்மனுக்கு பூஜை வழிபாடு பரவலாக காணப்படும் நிலையில் அர்ச்சனாவும் பூஜை செய்த இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகியது.

Advertisement