உள்ளே நுழைந்த போது அர்ச்சனாவிற்கு பல்ப் கொடுத்துள்ள பாலாஜி – இதனால் தான் அவருக்கு சிம்ப்ளி வேஸ்ட்னு பட்டம் கொடுத்தாரா அர்ச்சனா.

0
9301
archana
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா உள்ளே நுழைந்துள்ளார். அர்ச்சனா, பிக் பாஸின் முதல் நாளே கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் பிக் பாஸில் கலந்துகொள்ள சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது எப்படியோ அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டு இருக்கிறார்.அர்ச்சனாவை பற்றி சொல்லவா வேண்டும். இவரை பார்த்ததும் போட்டியாளர்கள் அனைவரும் குஷியில் ஆழ்ந்தனர். அர்ச்சனா பபிக் பாஸ் வீட்டில் நுழைந்த உடனேயே போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் தங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தனர்.

-விளம்பரம்-

அதே போல அர்ச்சனா உள்ளே சென்றதும் அர்ச்சனாவிற்கு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் பட்டப்பெயரை கொடுத்தார் அர்ச்சனா.அதில் முதலில் பாலாஜி முருகதாஸுக்கு ”நோ கமெண்ட்ஸ், சிம்ப்ளி வேஸ்ட்” என்ற பட்டத்தை கொடுத்தார். இப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் குறித்து அர்ச்சனா நேற்றய Unseen வீடியோவில் பேசி இருக்கிறார். நேற்று கார்டன் ஏரியாவில் சோமசேகர் அனிதா ரியோ ஆகிய அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது பாலாஜி திடீரென்று அந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டார். இதனால் நிஷா நானும் இருக்கிறேன் என்று சிறிது நேரம் இருப்பான் பின்பு சென்று விடுவான் என்று கூற, அதற்கு சோம் சேகர் அவன் இப்பயாவது சிரிக்கிறான், ஆரம்பத்தில் அத கூட செய்யல என்று சொல்கிறார்.

- Advertisement -

அதற்கு நிஷா, வந்த முதல் நாளே தான் அப்படி இருந்தான் பின்பு தான் தெரிந்தது அவன் மீசை வைத்த குழந்தை என்று சொன்னார். அப்போது பேசிய அர்ச்சனா அவனிடம் கொஞ்சம் முரட்டுத் தன்மை அதிகம் இருக்கிறது அதை நான் முதல் நாளே கவனித்து விட்டேன் நான் நேற்று உள்ளே வந்தபோது என்னை மோசமாக வரவேற்றது பாலாதான் heavy -யா ஒருத்தர் வந்துட்டாங்க என்று சொன்னார். அதன்பின்னர் இன்னொரு வார்த்தை சொன்னான் பெரிய தலைவலியா இருக்கப்போவது என்று இரண்டாவது தடவையும் சொன்னார். ஆனால் அதைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை காரணம் அவன் ஏதோ ஒரு ஆக்ரோஷத்தில் வெளிப்பாட்டிற்கு செய்கிறான் என்று புரிந்து கொண்டேன். ஆனால் கொஞ்சம் நாளில் இது கண்டிப்பாக சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டேன் என்று அர்ச்சனா பேசிக்கொண்டு இருக்கும்போது ரியோ குறுக்கிட்டு பேசி கண்டிப்பாக அது சரியாகிவிடும் என்று சொன்னார்.

அதற்கு அர்ச்சனாவும் ஆமாம் அது சரியாகி விட்டது. இங்கே இருக்கும் சிலருக்கு என்னை யார் என்று கூட தெரியாது ஆனால் சோமசேகர் என்னிடம் ஹாய் சொன்னார் ஆரி சொன்னார், ரமேஷ் அண்ணா சொன்னார் ,ஆனால் அவன் மட்டும் கதவுக்கு அருகில் இருந்து பின்னர் அப்படியே உள்ளே சென்றுவிட்டான். யார் வீட்டுக்கு வந்தாலும் அவர்களே பிடிக்கிறதோ இல்லையோ முதலில் அவர்களை வாங்க என்று நாம் சொல்வோம் இல்லையா. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து நான் குளித்துவிட்டு வெளியே வந்தபின்னர் அக்கா உங்கள் மைக் இதோ என்று என்னிடம் கொடுத்தான் அப்போதுதான் அவனை பற்றி நான் புரிந்து கொண்டேன்.

-விளம்பரம்-
Advertisement