திடீரென்று மயங்கி விழுந்த அசீம், தூக்கி சென்று ஓடிய போட்டியாளர்கள் – அவரின் தற்போதய நிலை என்ன ?

0
214
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 47 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை போட்டியை கடினமாக்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஏலியன் மற்றும் மனிதர்கள் என்ற டாஸ்க் கொடுக்கட்டு இருக்கிறது. இந்த டாஸ்க் ஆரம்பித்ததில் இருந்தே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. அதிலும் இதுநாள் வரை அமைதியாக இருந்த ஜனனி எல்லாம் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கதிர் அசீம் ஆகிய இருவரும் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அசின் தனக்கு மிகவும் சோர்வாக இருப்பதாக கூறிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஏடிகே அஸீமிற்கு காபி போட்டு எடுத்து வந்திருந்தார். அப்போது அசின் எழுந்து அந்த காபியை வாங்க முற்பட்டபோது திடீரென்று மயங்கி கீழே விழுந்து விட்டார். இதை பார்த்து கதிரவன் மற்றும் ஏடிகே இருவரும் ஒரு கணம் பதிரி போனார்கள்.

-விளம்பரம்-

மயங்கி விழுந்த அசிமை எவ்வளவோ எழுப்ப முயற்சி செய்தும் அவர் எழவே இல்லை. பின்னர் அவரை மருத்துவ அறைக்கு குண்டு கட்டாக தூக்கிச் சென்றார்கள். உயர் ரத்த அழுத்தம் காரணமாக தான் அசீம் இப்படி மயங்கி விழுந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அசின் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வந்தார். இந்த சம்பவத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அசீம் ஏற்கனவே மிகவும் சோர்வாக இருந்ததால்தான் இப்படி மயங்கி விழுந்துவிட்டார் என்று கூறி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் அசின் தான் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement