கப்ப எடுத்துட்டு போய் அவங்க கைல கொடுக்கனும் – ஆசையாக இருக்கும் தினேஷ், வாய்ப்பே இல்லை என்பது போல ரஷிதா போட்ட பதிவு.

0
451
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவருக்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் சட்டபூர்வமாக பிரியவில்லை. மேலும், ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை . இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது. பலரும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது. பின் சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.

- Advertisement -

தினேஷ் மீது ரக்ஷிதா புகார் கொடுத்து இருந்தார். பின் இருவரையுமே போலீசார் விசாரித்து முறையாக விவாகரத்து செய்ய சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் தினேஷ் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். தற்போது தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதில் அவருடைய மனைவிக்காக தான் கலந்து கொண்டிருப்பதாகவும், டைட்டிலை அவருக்காக பரிசளிப்பேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.

இதைப் பார்த்த தினேஷ்- ரக்ஷிதா ரசிகர்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். ஆனால், போன சீசன்னில் கலந்து கொண்ட ரக்ஷிதா தன்னுடைய கணவரை குறித்து எதுவுமே பேசவில்லை. அதோடு தினேஷ் , எங்களுடைய பிரச்சனையின் முடிவு பாசிட்வ்வாக தான் இருக்கும் என்று கூறி இருந்தார். இதற்கு ரக்ஷிதா, வாய்ப்பில்லை என்பது போல பதிவு போட்டிருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பலருமே தினேஷ் இவ்வளவு இறங்கியும் ஏன் ரக்ஷிதா பிடிவாதம் பிடிக்கிறார். என்னதான் பிரச்சனை என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தனக்கு கோப்பை கிடைத்தால் அதை ஒருவரிடம் கொடுப்பேன் என்று ரக்ஷிதாவை நினைத்து உருகி பேசி இருந்தார். ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது போல ‘No Means No’ என்ற நேர்கொண்ட பார்வை படத்தின் வசனத்தை போட்டு ‘புரிஞ்சா சரி’ என்று பதிவிட்டுள்ளார்.

இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தினேஷ்ஷின் பெற்றோர்களும் உறுதி செய்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ரஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இறக்கும் நேரம் வரும் போது இறந்து விட வேண்டும் என்று நினைக்கும் நபர்களின் நானும் ஒருவர். என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்’ என்று குறிப்பிட்டு நிம்மதியான வாழ்கை, வாழு, வாழ விடு போன்ற ஹேஸ் டேக்குகளை பதிவிட்டுள்ளார்.

Advertisement