என் பெயர் டேமேஜ் ஆகிடும், இத மட்டும் நாளைக்கு ஒளிபரப்பாதீங்க ப்ளீஸ் – கேமரா முன் புலம்பிய அசீம். வைரலாகும் வீடியோ.

0
537
Azeem
- Advertisement -

அசீம் – அமுதவாணனின் சண்டை குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் காத்து இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கி 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் அசீம் கேப்டன் பதவியை வென்றார். அசீம் கேப்டன் ஆன உடனே பல அதிரடி மாற்றங்கள் செய்து இருந்தார்.

-விளம்பரம்-

பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் :

இது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்கப்பட்டது. பின் வழக்கம் போல் பிக் பாஸ் இந்த வாரம் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது, பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது. தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார். பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும்.

- Advertisement -

அசீம் – அமுதவாணன் சண்டை :

ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.இதனால் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அசீம் – அமுதவாணன் பயங்கரமாக சண்டை போட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

அமுதவாணனை அடித்தாரா அசீம் :;

அதாவது, ஏலியன் அணியில் இருக்கும் அமுதவாணன் பழங்குடியினர் அணியில் இருந்த கதிரவனை கைது செய்து பயங்கரமாக கொடுமைப்படுத்தியிருந்தார்கள்.இதனால் கோபப்பட்ட அசீம் அவர்களுக்கு இடையில் தலையிட்டு அமுதவாணனிடம் சண்டை போட்டு இருக்கிறார். உடனே, அமுதவாணனுக்கும், அசிமுக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி அசீம் உடைய கை தெரியாமல் அமுதவாணனின் கழுத்தில் பட்டது. ஆனால், அமுதவாணன், நீ என்னை எதுக்கு அடிக்கிறாய் என்று பயங்கரமாக கோபப்படுகிறார்.

-விளம்பரம்-

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

உடனே அசீம், என்னை அடி, அடித்து பார் என்று கத்துகிறார். இப்படி இவர்கள் இருவரும் சண்டை போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, அசீம் அடிக்கவில்லை என்றாலும் அவர் அடித்ததாக அமுதவாணன் சொல்வது தவறு என்றும், அசீம் இடையில் சென்றது தவறு என்றும் கூறுகிறார்கள். இந்த வார இறுதியில் இது குறித்து கமலஹாசன் என்ன சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

பிக் பாஸில் இருந்து வெளியேற முடிவெடுத்த அசீம் :

இப்படி ஒரு நிலையில் அசீம் கமெரா முன் வந்து நான் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டும் நான் இதற்கு மேல் இந்த விளையாட்டில் தொடர விரும்பவில்லை. நான் அழுகவில்லை கோபப்படவில்லை, நான் தெளிவாகத்தான் இருக்கிறேன். வீடே எனக்கு எதிராக இருக்கும்போது நான் இந்த விளையாட்டை விளையாட விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கேமரா முன்வந்து பேசிய அசிம் நான் பிக் பாஸ் இடம் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் பேச வைக்கவில்லை .

ஒளிபரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் :

இன்று நடந்த அந்த சண்டை மிகவும் கோபத்தில் நடந்து விட்டது. தயவு செய்து அதை மட்டும் ஒளிபரப்ப வேண்டாம். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நாளை அதை ஒளிபரப்ப வேண்டாம். நான் செய்தது தவறுதான் ஏதோ கோபத்தில் செய்து விட்டேன். அதனால் தான் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். கதிரவனை அப்படி செய்ததால் எனக்கு கோபம் வந்துவிட்டது. அந்த கோபத்தில் இப்படி செய்து விட்டேன். நான் அமுதவாணனிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன். அதனால் அதை நாளை ஒளிபரப்ப வேண்டாம் ஏனென்றால் அதை ஒளிபரப்பினால் அது பெரிய விஷயமாக மாறிவிடும். என்னுடைய பெயர் கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் குழுவுடன் சேர்ந்து முடிவு செய்யுங்கள்.

Advertisement