புதுமண தம்பதி கெளதம் கார்த்திக் – மஞ்சிமாவிற்கு விக்கி நயன் அனுப்பி வைத்த கல்யாண பரிசு. என்ன தெரியுமா ?

0
477
- Advertisement -

புதுமண தம்பிகளான கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்கள் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ஒருவர். கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சிப்பாய், என்னமோ எதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனலும், இவருடைய படங்கள் எல்லாம் பெரிதாக மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.

-விளம்பரம்-

இந்த நிலையில் கெளதம் கார்த்திக் – மஞ்சிமாவின் திருமணம் குறித்து தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது . அதாவது, சமீபத்தில் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர், கௌதம் கார்த்தியிடம் திருமணம் எப்போது என்று கேட்டிருக்கிறார்? அதற்கு கௌதம் கார்த்திக், விரைவில் நடக்கும் என கூறி இருந்தார்.

- Advertisement -

இப்படி இவர் கூறியதன் மூலம் பொண்ணு ரெடி போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியிருந்தது. தேவராட்டம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இவர்கள் இருவரும் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

வைரலான பத்திரிகை :

அதோடு இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சமீபத்தில் தான் தங்கள் காதலை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். சமீபத்தில் தான் இவர்களின் திருமண பத்திரிகை வெளியாகிஇருந்தது. அந்த திருமண பத்திரிகை முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு இந்த திருமண அழைப்பு அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தங்கள் திருமணத்தையும் சிம்பிளாக நடத்தி இருக்கின்றனர். பொதுவாக பிரபங்களின் திருமணம் என்றாலே மிக பிரம்மாண்டமாக நடக்கும், அதிலும் திருமணத்தை மிக பிரபலமான இடங்களில் வைத்து பிரம்மாண்ட செட் அமைத்து விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பர நகைகள் என்று தான் நடைபெறும். ஆனால், கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இதற்கெல்லாம் மாறாக மிகவும் எளிமையாக தங்கள் திருமணத்தை முடித்து இருப்பது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

விக்கி – நயன் வாழ்த்து :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் புதுமணத் தம்பதிகளுக்கு அன்பளிப்புடன் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனுப்பிய கேக் மற்றும் சிவப்பு ரோஜா பூங்கொத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துக் கொண்டார் மஞ்சிமா. அதில், “அன்புள்ள மஞ்சிமா மற்றும் கவுதம், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் விக்கி மற்றும் நயன்” என எழுதப்பட்டிருந்தது.

Advertisement