‘ஊறுகாய் விற்கும் பெண்ணின் இடுப்பு’ – முதல் கதையில் அனைவரையும் கவர்ந்து இரண்டாம் கதையில் சர்ச்சையில் சிக்கிய பவா.

0
659
- Advertisement -

பவா செல்லத்துரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களை அமர வைத்து கதை ஒன்றை சொல்லி இருந்தார். அந்த கதையில் பெண்ணின் இடுப்பை தான் தொட்டதை பற்றி அவர் கூற அந்த கதையை கேட்ட பின்னர் சக போட்டியாளர்களும் ஒரு பெண்ணின் இடுப்பை கிள்ளுவதை எப்படி பெருமையாக கூறலாம் என்று விவாதத்தை துவங்கிவிட்டனர்.இதனை பலரும் அவர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

-விளம்பரம்-

பாவா செல்லத்துரை கூறிய கதை

அதில் பிரபல மலையாள எழுத்தாளரான பாலச்சந்திரன் என்பவர், தன் வீட்டுக்கு வரும் ஒரு உறுகாய் விற்பதற்கு அவரது வீட்டிற்குள் அழைத்து அதன் பின் இடுப்பழகில் மயங்கி அவரின் இடையை தொட்டதாகவும், அதில் அப்பெண் கோபம் கொண்டு அந்த எழுத்தாளரின் வலது கன்னத்தில் ஓங்கி அடித்ததாகவும் சொன்னார் அவர். இது போன்ற தொழில் செய்வதற்கு நான் ஏன் உறுகாய் விற்க வேண்டும் அதற்க்கு நான் லாட்ஜில் சென்று இருப்பேன் என்றும் அந்த பெண் அப்போது கூறியுள்ளார்.

- Advertisement -

அந்த எழுத்தாளர் பற்றி தெரிந்து கொண்ட பின் அந்த பெண் நீங்கள் யார் என்று தெரியாமல் அறைந்து விட்டேன் என்றும் அந்த பெண் அந்த எழுத்தாளரிடம் மன்னிப்பு கேட்டார் என்றும் பாலசந்தர் எழுதி இருந்ததாகவும் பாவா செல்லத்துரை கூறினார். அதில் அப்பெண்ணின் இடுப்பை, வழுக்கும் வெண்ணைகட்டி என்று வர்ணித்தார் பவா. இந்த வார்த்தை அங்கிருந்த போட்டியாளர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. அசௌகரியத்தை கொடுத்தது. அவர்கள் எதிர்க்கத் தொடங்கவே, ஒருகட்டத்தில் அனைவரும் அவரை எதிர்க்க ஆரம்பித்தனர். இது குறித்து விஷ்ணு விஜய் அவரிடம் கேட்ட போது இங்கு உலகில் யாரும் உன்னதமான மனிதர் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பிரதிப் கூறியது:

அதே போல பவா செல்லத்துரையிடம் பேசிய பிரதீப் ‘நீங்கள் எனக்கு குரு போன்றவர். நீங்கள் என்ன செய்தாலும் நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால், நீங்கள் அங்கங்கே எச்சை துப்புவதை நிறுத்துங்கள் என்று கண்ணீருடன் கூறினார். ஆனால், பவா செல்லத்துரையோ நான் யாருக்காகவும் என் சுபாவத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். இந்தக் கதை ஒரு பக்கம் ஓடிக்கொண்டே இருக்க இந்த கதையை பூர்ணிமாவும் உடன்படவில்லை என தங்களுக்குள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

விசித்திரா கூறியது :

மேலும் அவர் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் ஒரு தவறு செய்துவிட்டு அதை ஒப்புக் கொண்டால் அது சரியான மாறிவிடும் என்பது போல் இருக்கிறது. இந்த நிலையில் பாவா செல்லதுரை விடம் வந்த விசித்திரா நீங்கள் ஒரு கதை கூறும்போது பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது பாதியிலே நிறுத்துவது போல எனக்கு தோன்றுகிறது. உங்கள் கதையில் நிறைய நெகட்டிவ் இருப்பது போலவும் தோன்றுகிறது. கதையைக் கேட்டு யாரோ ஒருவர் திருந்தலாம் என்று அவர் கூறினார். ஆனால் நீங்கள் சொல்வது வேறு மாதிரி அவரின் தலையில் உட்கார்ந்து விடக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த பாவா நான் கதை சொல்லவில்லை நான் படைத்தது தான் கூறுகிறேன். உங்களுக்கு ஏற்பட்டு பீலிங் வேறு யாருக்காவது வந்திருக்கிறதா என்று கேளுங்கள் என்றும் பாவா கூறினார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஜோவிகா இந்த கதையை எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. இதில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்ட உடனே பதிலளித்த பாவா இந்த கதையை நான் ஏன் சொன்னேன் என்றால் அவ்வளவு பெரிய புகழுடைய அவர் தவறு செய்து கொண்டால் அனைத்தையும் நேர்மையாக ஒப்புக்கொண்டு பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் நான் இங்கு கூற வந்தேன்.

இதுபோன்ற இங்கு யாரும் அது போல் பதிவு செய்யவில்லை கண்ணதாசன் மட்டும் தான் வனவாசம் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார் பாலச்சந்திரன் அனுபவத்தை நான் சொல்லவில்லை அவருடைய நேர்மையதான் நான் இங்கு சொன்னேன் என்று கூறினார். உடனே ஜோவிக்கா அங்கிருந்து சரி என்று நகர்ந்து விட்டார். சீசன் தொடங்கிய ஆரம்பத்திலேயே அவர் கதை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இனி என்ன நடக்கப்போகுது என்று காத்திருந்து பார்க்கலாம்.

Advertisement