சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளில் இந்த பிக் பாஸ் 3 பிரபலத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மறந்துடீங்களே.

0
2148
rajini
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நம்ம தலைவர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று. இவருடைய பிறந்த நாளை இந்தியாவே கொண்டாடி வருகிறது. ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய நடிப்பாலும், ஸ்டைலாலும், பேச்சாலும் மாஸ் காட்டி லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 70 ஆவது பிறந்த நாளை அமர்க்களமாக தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். மேலும், சமூக வலைத் தளங்கள் அனைத்திலும் ரசிகர்களும், மக்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை குவித்துக் கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இன்றைய டிரெண்டிங் நியூஸ் நம்ம தலைவர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் தான். இந்த நிலையில் தமிழ் சினிமா உலகில் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்த சேரன் அவர்களின் பிறந்தநாளும் இன்று தான். சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பல பேர் இவருடைய பிறந்த நாளை மறந்து விட்டார்கள்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

பொதுவாகவே இயக்குனர் சேரன் அவர்கள் கிராமத்து பின்னணியும், குடும்ப உறவினர்களின் பாசத்தையும் வைத்து படம் எடுப்பதில் கைத்தேர்ந்தவர். தமிழ் சினிமா 90களில் சிறந்த இயக்குனராக திகழ்ந்த. இவர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இவர் தன்னுடைய படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். சேரன் அவர்கள் கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதற்கு பின் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. பின்னர் பிக்பாஸ் வீட்டிற்கு சேரனை என்கரேஜ் செய்து அனுப்பி வைத்தது விஜய் சேதுபதி தான் என்று ஒரு எபிசோடில் கூறியுள்ளார். ஏனென்றால் இவர் சினிமாவில் படங்கள் இயக்கி பல வருடங்கள் ஆனது.

இதையும் பாருங்க : யார் சித்தார்த். கேலி செய்த அமைச்சர் ஜெயக்குமார். பாக்ஸர் மாமா என்று சித்தார்த் கொடுத்த பதிலடியை பாருங்க.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஒரு நெருக்கம் ஏற்படும் அதனால் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று விஜய் சேதுபதி கூறியதாக சொன்னார். அதன் பின் தான் இவர் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டாராம். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட வேற லெவல்ல போனது என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் இந்த சீசன் 3க்கு என ரசிகர்கள் கூட்டம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் உள்ளார்கள். பின் பிக்பாஸ் வீட்டில் இவரை சுற்றி பல சர்ச்சைகளும், பிரச்சினைகளும் எழுந்தன.

-விளம்பரம்-
Image result for cheran and vijay sethupathi

அதை எல்லாம் சமாளித்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தான் சேரன் அவர்கள் மீண்டும் மக்களிடையே மிகப் பிரபலமானர். இயக்குனர் சேரன் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறி இருந்தார். தற்போது இது குறித்த கேள்விகள் தான் இணையங்களில் எழுந்து வருகின்றன. மேலும், சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக சேரன் தெரிவித்து இருந்தார்.

Image

அதுமட்டும் இல்லாமல் ஜனவரியில் சங்கத்தமிழன் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் எடுக்கப்போகிறேன் என்றும் பிக் பாஸ் வீட்டில் இருந்து போது சேரன் அறிவித்தார். இந்த படம் குறித்து ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களைக் கூட அந்த படத்தில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே சேரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Advertisement