பிக் பாஸ் சினேகனுக்கு திருமணமா..? மணப்பெண் யார் தெரியுமா..? விவரம் இதோ

0
1526
snehan

தமிழ் திரையுலகின் சிறந்த பாடல்களை எழுதி பரீட்சயப்பட்டவர்,எழுத்தாளார், கவிஞன்,பாடலாசிரியர் சினேகன். கடந்த ஆண்டு பிக் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் ஆழமாக பந்திந்தார். தற்போது இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கிளம்பியுள்ளது.

snehan

கவிஞர் என்ற பெயரை பெற்றிருந்த சினேகன் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று நூறு சதவீதம், கட்டிபிடி மருத்துவர் என்று பல புனை பெயர்களை பெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தனக்கு 100கும் மேற்பட்ட கேர்ள் ப்ரண்ட்ஸ் இருப்பதாகவும் கூறிவந்தார் சினேகன்.

மேலும், தான் எப்போதும் தேவதைகளுடன் வாழ்ந்து வருவதாக கூறி வந்த சினேகன், தற்போது திருமணம் செய்துகொள்ள போகிறாராம். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சினேகனின் அப்பாவும் ஒரு நாள் அவரை சந்திக்க சென்றிருந்தார். அப்போது ஸ்நேகனிடம் அவரது தந்தை ‘தான் கண்மூடுவதற்குள் உனக்கு ஒரு கல்யாணத்தை செய்து பார்த்து விடவேண்டும்’ என்று கூறியதாக சினேகன் தெரிவித்திருந்தார்.

snehan

இந்நிலையில் தனது அப்பாவின் ஆசைப்படி சினேகன், விரைவில் தனது குடும்பத்திற்க்கு நெருங்கிய ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது. தற்போது ‘ராஜ ராஜா சோழன் போர்வாள் மற்றும் பொம்மி வீரன்’ என்று இரு படங்களில் நடித்து வரும் சினேகன், விரைவில் தனது திருமணம் குறித்த தகவல்களை தெரிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.