பிக் பாஸ் முடிந்தும் தொடரும் பகை – வெளியில் வந்தும் இரண்டு டீமாக பிரிந்து இருக்கும் போட்டியாளர்கள். டீம் A ஹெட் வனிதா அக்கா தான்.

0
422
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் போட்டியாளர்கள் மத்தியில் பகை நீடித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இது பிக் பாஸ், சுமால் பாஸ் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு புது விதிமுறைகள் எல்லாம் போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. மேலும் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டை எல்லாம் மிகப்பெரிய அளவில் விவாதமாகவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் 7

குறிப்பாக, பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக இருந்தது. இதனால் கமலை இதுவரை இல்லாத அளவிற்கு பலருமே வறுத்தெடுத்து இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

டைட்டில் வின்னர்:

அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். 16 லட்சம் வாக்குகளை பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி இருந்தார். இது பிக் பாஸ் வரலாற்றிலேயே புதிய சாதனை என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இதுவரை வந்த சீசன்களிலேயே வைல்ட் கார்ட் மூலம் நுழைந்து ஒரு நபர் வெற்றி பெற்றது இல்லை. இதுதான் முதல் முறை என்றும், அர்ச்சனா தான் அந்த சாதனையை செய்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஏ டிம்- பி டிம் பிரிவு:

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு நிகழ்ச்சி முடிந்தும் போட்டியாளர்கள் மத்தியில் பகை நீண்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிக் பாஸில் இருக்கும் போது போட்டியாளர்கள் ஏ டிம், பி டிம் என்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருந்தார்கள். மாயாவின் புள்ளிகேங்கில் ஜோவிகா, பூர்ணிமா, விசித்ரா, நிக்சன், கானா பாலா, அக்ஷயா, சரவண விக்ரம் ஆகியோ இருந்தார்கள். இவர்களை ஏடிம் என்று சொல்வார்கள். பி டிமில் விஷ்ணு, பிராவோ, தினேஷ், மணி, அர்ச்சனா, சுரேஷ் ஆகியோர் இருந்தார்கள்.

வைரலாகும் புகைப்படம்:

நிகழ்ச்சி முடியும் வரையே இந்த ஏ டிம், பி டிம் பிரிவினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு பின்னர் பிராவோ, விஷ்ணு விஜய் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அவுட்டிங் எல்லாம் சென்று போட்டோக்களை சோசியல் மீடியா பகிர்ந்தார்கள். இவர்களுக்கு போட்டியாகவே மாயா, ஜோவிகா, கானா பாலா ஆகியோர் வனிதா வீட்டில் பார்ட்டி செய்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் போட்டு இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள், இன்னுமாடா நீங்க திருந்தல? என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement