கார நிறுத்து ஹாய் சொல்ல மாட்ட – காரை வழி மறித்து பிக் பாஸ் போட்டியாளரிடம் ஏற்கனவே வம்பிழுத்துள்ள கூல் சுரேஷ்.

0
739
CoolSuresh
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த செய்தி தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக ஞாயிற்று கிழமை தொடங்கியது. முதல் சீசனை தொடர்ந்து இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-
CoolSuresh

தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். இந்த சீசனலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான போட்டியாளர்களில் கூல் சுரேஷ் ஒருவர். இவர் சினிமாவில் நடித்து பிரபலமானதை விட சமூக வலைதளத்தில் மூலம் பிரபலமானது தான் அதிகம். இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

கூல் சுரேஷ் குறித்த தகவல்:

இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். பின் காமெடியனாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால், சமீப காலமாக இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் அணைத்து ஹீரோக்களின் படங்களை வித்யாசமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சரக்கு படத்தின் மேடையில் இவர் தொகுப்பாளினி மீது திடீரென்று மாலை போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இவரை பலரும் சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

கூல் சுரேஷ்-பூர்ணிமா ரவி :

பின்னர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். நான் அந்த சகோதரி மீது விளையாட்டாக மாலை போட்டேன். அதற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் கூல் சுரேஷ்-பூர்ணிமா ரவிக்கும் இடையே முதல் நாளே நடந்த விஷயம் தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, முதல் ஆளாக கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அவரை தொடர்ந்து பூர்ணிமா ரவி இரண்டாம் நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் . அப்போது ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்ட போது பூர்ணிமா ரவி ‘ ஒரு நாள் நான் ரேண்டமா காரில் போயிட்டு போய்க்கொண்டிருந்தேன்.

என்ஜாய் பட ப்ரோமோஷனில் கூல் சுரேஷ் செய்தது:

சம்பந்தமே இல்லாமல் என் காரை நிறுத்தி கதவை திறந்து பேசிக் கொண்டிருந்தீர்கள். சரி விடுங்க, நீங்கள் அடிக்கடி இப்படித்தான் செய்வீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போது கூல் சுரேஷ் ஆமாம், ஆமாம் என்று சொல்கிறார். என்ஜாய் படத்தின் ப்ரொமோஷனுக்காக நான் கத்தி கத்தி பேசிக் கொண்டிருப்பேன். அந்த படத்தில் நடித்த நடிகை எதையுமே கண்டுகொள்ளாமல் காரில் கிளம்பி செல்கிறார். படத்தில் நடித்தவர்கள் சொகுசாக காரில் செல்வது ப்ரோமோஷன் செய்ய கத்துவார்கள் நடுரோட்டில் நிற்பதா? என்று ஆவேசமாக கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். தற்போது இந்த இரண்டு வீடியோவையும் இணைத்து தான் நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் என்ஜாய் .

Advertisement