ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய பிக் பாஸ் தனலட்சுமி – ரசிகர்களின் கமெண்ட்ஸ்ஸை பாருங்க.

0
1843
- Advertisement -

ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு தனலட்சுமி நடனமாடிய வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது.

-விளம்பரம்-

ஆனால் கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக, கடைசியாக ரஜினி நடிப்பில் வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இதை அடுத்து தற்போது ரஜினி நடித்து வரும் படம்“ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இயக்குனர் நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

ஏற்கனவே இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை. எனவே இவருக்கு “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, தமன்னா. ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர்.

படம் குறித்த தகவல்:

மேலும், சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. தற்போது படத்தின் ரிலீஸ் பணிக்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

காவாலா பாடல்:

இந்த பாடலானது துள்ளல் அதிகம் உள்ள கலக்கலான பாடலாக வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு தமன்னா செம கிளாமராக குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது இந்த பாடல் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. மேலும், இந்த பாடல் தான் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி கொண்டிருக்கின்றது. அதோடு விஜயின் லியோ படத்தில் வெளியான நா ரெடி பாடலை பின்னுக்கு தள்ளி இந்தப் பாடலில் தமன்னாவின் நடனம் அனைவரையும் இழுத்து வருகிறது.

தனலட்சுமி பதிவிட்ட வீடியோ:

மேலும், பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியீட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நடிகை தனலட்சுமி அவர்கள் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் பலரும், ஐயோ! அந்த பாட்டுக்கு இருந்த மரியாதை போச்சு, காவாலா இல்லை ரொம்ப கேவலம் என பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் தனலட்சுமி ஃபேன்ஸ் பாராட்டி லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement