விஜய்யின் அரசியல் குறித்து வனிதா அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம். ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.
இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், இந்த படத்தில் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.
லியோ படம்:
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- படத்தின் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலிகான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது..
படம் குறித்த தகவல்:
இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இந்த நா ரெடி பாடல் தான் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இப்படி நாளுக்கு நாள் லியோ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தளபதி 68 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியல்:
இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் தொடர்ந்து இணையத்தில் பரவிய வண்ணம் இருக்கிறது. அதற்கேற்றார் போல் விஜய் அவர்களும் தன்னுடைய ரசிகர்களுடன் அடிக்கடி கூட்டம் நடத்தியும், ஆலோசனை செய்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்த ஆண்டு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவ – மாணவிகளுக்கு விஜய் அவர்கள் பரிசு, சான்றிதழ் அளித்திருந்தார். இது தமிழகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இதனால் கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக விஜயின் அரசியல் குறித்து வனிதா அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வனிதா பேட்டி:
அதாவது, சமீபத்தில் வனிதா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் வனிதா அவர்களிடம் விஜய் அரசியல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்கள் . அதற்கு வனிதா, விஜய் ஒரு புத்திசாலியான நபர். வருங்காலத்தை யோசித்து அவர் பல விஷயங்களை செய்வார். தற்போது அவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன். அது மட்டும் இல்லாமல் அவருக்கு ஒரு தொண்டராகவும் நான் இருப்பேன் என்று கூறிருக்கிறார். இப்படி வனிதா கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது