தினேஷ் பண்ண தப்புக்கு – தினேஷ் ரஷிதா பிரிவிற்கான காரணம் குறித்து பேசிய நெருங்கிய நண்பர்.

0
407
Rachitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 51 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
rachitha

நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம். தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ். இதனால் நிகழ்ச்சி ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடு 3வது ப்ரோமோவில், உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ்.

- Advertisement -

அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதில் தினேஷ், எனக்கும் என்னுடைய மனைவி ரக்‌ஷிதாவிற்கும் இடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருக்கிறது. நாங்கள் தனியாக தான் வசித்து வருகிறோம். இது என்னை மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சோகமாக பேசி இருக்கிறார். தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரக்ஷிதா-தினேஷ் சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தினேஷின் நண்பர் சரத் கூறியது, தினேஷிற்கும் எனக்கும் பல வருடங்களாக நட்பு இருக்கிறது.

நண்பன் என்று சொல்வதை விட எங்கள் வீட்டில் ஒருத்தனாக தான் அவனை நான் நினைக்கிறேன். என் குழந்தைகள் மேல் அவன் உயிராக இருப்பான். அந்த குழந்தைகளுக்கு மொட்டை போட்டு தாய்மாமன் என்று அவன் மடியில் உட்கார வைத்து தான் மொட்டை போட்டு காது குத்தினோம். அப்ப ஒரு வார்த்தை சொன்னார், என் மனைவி கூட என்னை மதிக்காமல் விட்டுட்டு போயிட்டாங்க. ஆனா, நீ தாய்மாமன் அந்தஸ்து தந்திருக்க என்று சொன்னார். அந்த வார்த்தையை கேட்டதுமே எனக்கு ரொம்ப கஷ்டமாகிவிட்டது. இப்பவும் காலையில் 10:00 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் இரவு தூங்க தான் வீட்டுக்கு போவான்.

-விளம்பரம்-

மற்ற நேரம் வேலை இல்லையா என்றாலும் வீட்டுக்கு போக மாட்டான். காரணம் தனிமை. அதுவும் கடந்த மூன்று வருடமாக தனிமையில் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான். ரக்ஷிதாவும் எனக்கு தங்கை மாதிரி தான். அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை என்ன என்பது அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. பிக் பாஸ் போக வேண்டும் என்பது அவனுடைய தீவிரமான ஆசை. கடந்த சீசனிலேயே ரக்ஷிதா டைட்டில் வாங்கிடுவாங்க என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தான். ஆனால், அது நடக்கவில்லை. இதனால் ரொம்ப வருத்தப்பட்டான். அடுத்த சீசனில் நாம போய் வாங்கி அதை சரி செய்யலாம் என்று சொல்லிட்டு இருந்தான். அதனால் இந்த சீசனில் கலந்து கொண்டு நன்றாக விளையாடிக் கொண்டு வருகிறான்.

rachitha

தினேஷுக்கு டைட்டில் கிடைக்குமா என்று இப்ப என்னால் சொல்ல முடியவில்லை. கிடைத்தால் அதை எடுத்துக் கொண்டு நேரா ரக்சிதா கிட்ட தான் போவான். அது மட்டும் நிச்சயம் எனக்கு தெரியும். என் நண்பனாக இருந்தாலும் தினேஷ் தப்பே பண்ணாதவன் என்று நான் சொல்ல மாட்டேன். இவனிடமும் தப்பு இருக்கிறது. ஆனால், தப்பு என்று தெரிந்தால் சாரி கேட்ட இவன் ரெடியாக இருக்கிறான். ஆனால், ரக்ஷிதா என்ன மனநிலையில் இருக்காங்க என்று தெரியவில்லை. ஒரு வேளை இவனை விட்டு ரக்ஷிதா பிரிந்தால் இன்னொரு திருமண வாழ்க்கை என்ற எண்ணம் தினேஷுக்கு சுத்தமாக இல்லை. நான் ஒரு தடவை இதை பத்தி அவனிடமே கேட்டேன். அவன் சொன்னதை தான் நான் இங்கு சொல்கிறேன். ரக்ஷிதா மீதான லவ் அவனிடம் இன்னும் அப்படியே இருக்கிறது. இரண்டு பேருக்கும் மத்தியில் இருக்கும் பிரச்சினை சரியாகும் என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது என்று கூறி இருந்தார்.

Advertisement