வெளியேறுவதற்க்கு முன்பாக வனிதாவை பற்றி பேசிய பாத்திமா.! பறந்த கைதட்டல்.!

0
29878
fathima
- Advertisement -

பரபரப்பாக போய் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இன்று நடைபெற்றது. இந்த வாரம் நடந்த நாமினேஷனில் பாத்திமா, கவின், சாக்க்ஷி., மீரா, சரவணன், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றனர்.

-விளம்பரம்-
Fathima

இந்த வார பிக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வந்த நிலையில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது.

- Advertisement -

மேலும், இந்த வாரம் சாக்க்ஷி மற்றும் பாத்திமாவிற்கு தான் குறைவான வாக்குகள் விழுந்துள்ளது அதில் இறுதியாக பாத்திமா பாபு குறைவான வாக்குகள் பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தற்போது நமக்கு கிடைக்கபெற்றுள்ளன.

மேலும், நிகழ்ச்சியில் வெளியேறுவதற்கு முன்பாக மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசினார் பாத்திமா. அப்போது வனிதா குறித்து பேசுகையில் அவர் சற்று பல குறைகளை கூறியிருந்தார். வனிதாவை பற்றி பேசியதும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்த்தனர்.

-விளம்பரம்-
Vanitha

இதில் இருந்தே வனிதாவிற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த விதமான பெயர் உள்ளது என்பதைநம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு வேலை அடுத்த வாரம் வனிதா நாமினேஷனில் வந்தால் கண்டிப்பாக அவரை வீட்டுக்கு மக்கள் அனுப்பி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement