சினிமாவும் பிக் பாஸும் கொடுக்காத பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்த சீரியல், புதிய காரை வாங்கிய கேப்ரில்லா – விலை எவ்ளோ தெரியுமா ?

0
475
yashika
- Advertisement -

பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான கேப்ரில்லா புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரம்யா பாண்டியன், ஷிவானி Bmw காரை வாங்கி இருந்தார். அவரை தெடர்ந்து தாடி பாலாஜியும் Bmw காரை வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி பிக் பாஸ் பிரபலங்கள் பலர் புதிய கார்களை வாங்கி வரும் நிலையில் தற்போது கேப்ரில்லாவும் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நாம் பார்த்த எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்கள். பேபி ஷாலினி, மீனா என எத்தனையோ குழந்தைகள் சினிமாவில் பிரபலமாக இருந்தார்கள். அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.

- Advertisement -

சின்னத்திரை To சினிமா :

அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா சார்ல்டன். இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் தான் மக்களுக்கு பரிச்சியமானார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிகம் ஆர்வம் இருந்ததால் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.பின் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டத்தை வென்ற இவருக்கு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

பிக் பாஸ் வாய்ப்பு :

அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் நடித்தார். பின் தனுஷின் 3 உட்பட சில படங்களில் நடித்து உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லா சின்னத்திரையில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று இருந்தார்.குறிப்பாக பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்ட கேபி 5 லட்ச ருபாய் பணத்துடன் வெளியேறினார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் To சீரியல் :

பின் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்த BB ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு ஈரமான ரோஜாவே 2வில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த தொடரின் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கேபி புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

புதிய கார் :

இந்த காரின் விலை சுமார் 26 லட்சம் இருக்கும். தனது முதல் கார் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கேபி. மேலும், பல மாதம் யோசனைக்கு பின்னர் நான் சொந்தமாக ஒரு காரை வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தேன். நான் தற்போது Tata Harrier Dark Edition காரை என் முதல் காராக வாங்கியதை என்னை பெருமைபடிக்கிறேன். இது நீங்கள் எனக்கு தினமும் கொடுக்கும் அன்பு மற்றும் ஆதரவால் தான் சாத்தியமானது. இந்த beast என்னை பாதுகாக்கும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். யாஷிகாவும் இதே மாடல் காரை தான் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement