இவ்ளோவும் பன்னிட்டு இப்படி சொன்ன போது தான் எனக்கு சுர்ருன்னு ஏறிடிச்சி – ரியோ மீது கடுப்பான கேப்ரில்லா.

0
1910
rio
- Advertisement -

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் கேப்ரில்லா, ரியோ, வேல் முருகன் ஆகிய மூவரும் பங்கேற்றனர். இந்த டாஸ்க்கில் ரியோவிற்கு ஆதரவாக அனிதா, அஜித் நிஷா, சோம் சேகர்,ரம்யா ஆகியோர் இருந்தார்கள். அதே போல வேல் முருகனுக்கு ஆதரவாக ரேகா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, அர்ச்சனா ஆகியோர் இருந்தார்கள், ஆனால் கேப்ரில்லாவிற்கு மட்டும் சுரேஷ் ஒரே ஒருவர் மட்டும் தான் இருந்தார்.

-விளம்பரம்-

இந்த டாஸ்கின் போது கேப்ரில்லா எவ்வளவோ சொல்லியும் சுரேஷ் இந்த டாஸ்க் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். கேப்ரில்லாவிற்காக தனது வயதையும் உடல் பிரச்சனையையும் பொருட் படுத்தாமல் கேப்ரில்லாவை சுமந்தார் சுரேஷ். இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தி பட்ட கஷ்டத்தை பார்த்து கேப்ரில்லா இறங்கிவிட்டார். சுரேஷ் சக்கரவர்த்தியின் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டினார்கள். பின்னர் ரேகா வேல்முருகன் மீது இருந்து கையை எடுத்தால் ரியோ இந்த டாஸில் வெற்றிபெற்று அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த டாஸ்க் முடிந்தபின்னர் பாலாஜி, ஆஜித் மற்றும் கேப்ரில்லா ஆகிய மூவரும் தனியாக பேசிக்கொண்டு இருக்கும்போது எனக்கு மற்றவர்கள் ஆதரவாக எழவில்லை என்பது பிரச்சனை கிடையாது ஆனால் நீங்கள் இரண்டு பேர் கூட எனக்காக நிற்கவில்லையே என்று கேட்டு இருந்தார் கேப்ரில்லா. அப்போது பேசிய பாலாஜி ‘நீ கேப்டனாக ஆக நினைக்கிறாய் என்பது எனக்கு தெரியாது. அதேபோல ரியோ அண்ணாவிற்கு கூட அது தேவையில்லை என்று தான் சொன்னார்/ ஆனால் நான் தான் அவரை கட்டாயப்படுத்தி செய்ய வைத்தேன் என்று கூறினார் பாலாஜி.

அப்போது பேசிய கேப்ரில்லா எனக்கு ரியோவிடம் சொல்லணும் என்று போல தோன்றியது/ எல்லாத்தையும் முடித்து விட்டு பின்னர் அனைவரிடமும் எனக்கு ஒரே சங்கடமாக இருக்கிறது சங்கடமாக இருக்கிறது தலைவர் ஆனதை எண்ணி எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது என்று சொன்ன போது எனக்கு அப்படியே சுர்ருன்னு ஏறுது. அதற்கு பதிலளித்த பாலாஜி நான்தான் அவரை கட்டாயப்படுத்தி தலைவர் போட்டிக்கு நிற்க வைத்தேன் என்று கூறியுள்ளார் பாலாஜி.

-விளம்பரம்-
Advertisement