ஆமா, நீங்க எப்படி இவ்ளோ கலர் ஆனீங்க – பிக் பாஸ் இசைவாணியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் கேள்வி.

0
1603
- Advertisement -

பிக் பாஸ் இசைவாணியின் லேட்டஸ்ட் Transformationஐ கண்டு ரசிகர்கள் பலரும் வாயடைத்து போய்யுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த சீஸனின் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சயம் இல்லாத பலர் போட்டியாளராக கலந்துகொண்டனர். அந்த வகையில் கானா பாடகியான இசைவாணியும் இந்த சீசன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் இல்லாத முகமாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
isaivani

கானா பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இசைவாணி. இவர் பாடிய பல காண பாடல்கள் கொஞ்சம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தத. அந்த வகையில் மாட்டுக்கறி அரசியலை பேசும் வகையில் இவர் பாடிய ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது என்று சொல்லலாம். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இவருடைய கனவு லட்சியம்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் 2020ஆம் ஆண்டு இவர் இசையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசைவாணி தேர்வு செய்து பிபிசி பெருமைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆனால், ஆரம்பம் முதலே இவர் ரசிகர்கள் மத்தியில் பெயரை டேமேஜ் செய்துகொண்டார்.

அதிலும் குறிப்பாக இவருக்கு இமான் அண்ணாச்சிக்கு அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை தொடர முடியவில்லை. வழக்கமாக பிக் பாஸில் பங்கு பெரும் போட்டியாளர்களுக்கு அவரவர் பிரபலத்திற்கு ஏற்றார் போல வார சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த சீசனில் பங்கேற்ற இசைவாணிக்கு வாரம் 1 லட்சம் சம்பளம் பேசப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

அதன் அடிப்படையில் பிக் பாஸில் வீட்டில் இவர் மொத்தம் 49 நாட்கள் இருந்துள்ளார். இதை வாரமாக கணக்கிட்டால் மொத்தம் 7 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ள இசைவாணி 7 லட்ச ரூபாய் சம்பளத்துடன் பிக் பாஸ் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குவியும். ஆனால், இசைவாணிக்கு அப்படி எதுவும் அமையவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் நிகழ்ச்சிகளில் கூட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதும் இல்லை. ஆனால், சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில் முன்பை விட உடல் எடை குறைத்து படு வெள்ளையாக இருந்த இவரை பார்த்து, நீங்கள் இவ்வளவு கலர் இல்லையே, நீங்க எப்படி திடீர்னு இப்படி ஆனீங்க என்றெல்லாம் கமண்ட் செய்து வருகின்றனர.

Advertisement