விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது நான்காவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது.இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத பல புது நபர்களை போட்டியாளராக களமிறங்கினர்.
அந்த வகையில் இலங்கை பெண் ஜனனியும் ஒருவர், இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ஜனனிக்கு இந்த முறை ஆர்மியை ரசிகர்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு சிறு வயதில் பள்ளியில் எல்லோரும் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் தான் த்ரிஷா ஆக வேண்டும் என்று வகுப்பிலேயே தைரியமாக கூறியவர் ஜனனி.நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது. நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.
இதனால் இந்த சீசன் லாஸ்லியா இவர் தான் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் கடந்த சில வாரமாக இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்து வருவது இவரது ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு தள்ளி இருக்கிறது. ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். மேலும், வேறு யாராவது நெருங்கி பழகினால் கூட அது இவருக்கு பிடிக்காதது போலவே தான் நடந்து கொள்கிறார். மேலும், இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஆதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார்.
ஜனனியை மிகவும் சாதுவான பெண் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர்துண்டு விஷயத்தில் குயின்சிக்கு இவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது தன்னுடைய கையில் இருந்த டீ கப்பை உடைத்து கதிரி அழுது இருந்தார். ஜனனி இந்த விஷயத்தை கமல் கூட கண்டித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இவர் தன் மீது விமர்சனத்தை வைத்த விக்ரமனின் கருத்தை ஏற்க முடியாமல் கதறி அழுதி இருந்தது தான் தற்போது சமூக வலைதளத்தில் கேளிக்கை உள்ளாகி இருக்கிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் பெரிதாக பங்களிப்பு இல்லாத போட்டியாளர்களின் பெயர்களை குறிப்பிடச் சொன்னார் பிக் பாஸ் இதில் பெரும்பாலானோர் ஜனனியின் பெயரை தான் குறிப்பிட்டு இருந்தார்கள் அந்த வகையில் விக்கிரமனும் ஜனனியின் பெயரை கூறியிருந்தார். அதோடு ஜனனி ஒரு தனித்துவமான போட்டியாளராக விளையாடாமல் இருக்கிறார். அவர் யாரையோ சார்ந்து இருக்கிறார் என்று கூறியிருந்தார். இப்படி விக்ரமன் சொல்லும் போதே அமுதவாணன் ஆஜராகி ஜனனிக்காக பேசியிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் ஜனனி எனக்காக யாரும் வாக்குவாதம் செய்யாதீர்கள் என்று திடீரென்று கதறி அழுதார்.
உடனே மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவரை சமாதானம் செய்தனர், மேலும். விக்ரமன் ஜனனியை தனித்துவமான போட்டியாளர் இல்லை என்று சொன்னதால்தான் அவர் அப்படி அழுதார் என்றும் கூறினார்கள். ஆனால். ஜனனி இப்படி கதறி அழுத சில நிமிடங்களிலேயே மீண்டும் சாதாரணமாக வந்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். இதனை சுட்டிக்காட்டி வரும்நெட்டிசன்கள் பலரும் ஜனனி 2 மினிட்ஸ் மேகி போல அழுது நாடகமாடி இருக்கிறார் என்று கேலி செய்து வருகிறார்கள். அதோடு விக்ரமன் சொன்ன கருத்தை ஏற்க முடியாமல் தான் ஜனனி இப்படி நாடகம் போடுகிறார் என்றும் கூறி வருகிறார்கள்.