ஜோவிகா Vs விசித்ரா, அனல் பரந்த விவாதம் – படிப்பு குறித்து கோபிநாத் பேசிய வீடியோ வைரல்.

0
901
Jovika
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் படிப்பு குறித்து நடந்த சர்ச்சைக்கு நீயா நானா கோபிநாத் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டு உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பலர் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் வனிதா மகள் ஜோவிகாவும் ஒருவர். போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாள் அன்றே இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஜோவிகா, எனக்கு படிப்பு வராது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. இதனால் நான் மன அழுத்தத்தில் இருந்தபோது என்னுடைய அம்மா வனிதா தான் நீ என்ன ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார்.

- Advertisement -

நான் உடனே நடிகையாக என்று என்று சொன்னேன். பிறகு என் படிப்பை விட்டு நடிகையாக தேவையான கோர்ஸை எடுத்து படிக்க வைத்தார் என்று பேசிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டவுடன் பலருமே ஜோவிகாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக யுகேந்திரன் வாசுதேவன், நீ பேசிக்ஸ் பன்னிரண்டாம் வகுப்பு வரை கண்டிப்பாக படித்து விட வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்று கூறினார். உடனே விசித்திரா, முக்கியம் நீ ஒரு டிகிரி ஆவது முடிக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி மாறி மாறி பலரும் ஜோவிகாவிற்கு அறிவுரையும், சிலர் ஆதரவாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் ஜோவிகா கண்டுகொள்ளாதது போல் தான் இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சிலர் தங்களுக்குள் மற்ற போட்டியாளர்களுடன் இருக்கும் மனஸ்தாபங்களை பேசி சரி செய்துகொள்ள முயன்றனர். அப்போது ஜோவிகா, பிக் பாஸ் வந்த முதல் நாளே தன்னிடம் விசித்ரா படிப்பு பற்றி பேசியதை கூறி இருந்தார். பின்னர் இது பெரிய விவாதமாக மாற ‘நான் டாக்டரோ இஞ்சினியரோ ஆக சொல்லவில்லை. ஒரு +2 வாவது முடி என்று தான் சொன்னேன் என்றார். அதற்கு ஜோவிகாவோ, எனக்கு படிப்பு வரல அதனால எனக்கு ஒன்றும் தெரியாது என்று அர்த்தம் கிடையாது.

-விளம்பரம்-

ஜோவிகா- விசித்ரா சண்டை:

எனக்கு எழுத படிக்க தெரியும் என்று சொன்னதும் எங்க தமிழ் எழுதி பார்ப்போம் என்று கூறினார். எல்லோரும் டாக்டர் படித்தால் கம்பவுண்டர் யார் ஆகுவது? படிக்க சொல்லி வற்புறுத்துவதால் தான் நிறைய மரணங்கள் நடக்கின்றது ரொம்ப எமோஷனலாக ஜோவிகா பேசியிருந்தார். இதற்கு வீட்டில் உள்ள பிற போட்டியாளர்களும் அவருக்கு கைதட்டி ஆரவாரம் செய்து இருந்தார்கள். இதனால் விசித்திரா கோபமடைந்து ஜோவிகாவை பேசி இருக்கிறார். இப்படி நேற்று ஜோவிகா- விசித்ரா இடையே நடந்த சண்டைதான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு சிலர் ஜோவிகாவிற்கு ஆதரவாகவும் சிலர் விசித்ராவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

கோபிநாத் பேசிய வீடியோ:

இந்த நிலையில் இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் நீயா நானா கோபிநாத் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கோபிநாத் சொன்னது, படிக்காதவன் தான் சாதிக்கிறான் என்று சச்சின், பில்கேட்ஸ், காமராஜர் என ஒரு 10 பேரை சொல்வார்கள். படிக்காமல் வெற்றி பெற்றவர்கள் 10 பேரை நீங்கள் சொன்னால் படித்து வெற்றி பெற்றவர்கள் 10 லட்சம் பேரை நான் சொல்லுவேன். படிப்பு ரொம்ப முக்கியம். உங்களை திசை திருப்புகிறார்கள். கல்வி தான் முக்கியமானது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் ஒரு வருஷத்தில் நீட் தேர்வில் நம்ம பையன் தான் டாப்பில் வருவான். படிக்காமல் வெற்றி பெற்றவர்கள் லிஸ்டில் நம்ம ஃபர்ஸ்ட் சொல்வது காமராஜரை தான். அவர் படிக்காதவராக இருந்தாலும் அவர் ஏன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

படிப்பு குறித்து சொன்னது:

படிக்காத என்னாலே இவ்வளவு செய்ய முடியும் போது படித்தவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்று காமராஜர் கண்ட கனவினால் தான் இன்று இவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள். வறுமையில் இருந்தாலும் பிள்ளைகளை படிக்க வேண்டும் என்கிற பெற்றோர்கள் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். சோசியல் மீடியாவில் படிப்பு ஒண்ணுமே கிடையாது என்று சொல்றவனை நம்பாதீங்க. அவனெல்லாம் மக்கு பையன். படிப்பு என்பது மார்க் சம்பந்தப்பட்டதில்லை. படிப்பு தான் சமூக நீதியை சொல்லிக் கொடுக்கிறது. படிப்பு ஒரு ஆயுதம் என்று ஆக்ரோஷமாக கோபிநாத் பேசிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement