ஜூலி போட்ட ஒரு போட்டோ.! சரமாரியாக கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்.! புகைப்படம் உள்ளே.!

0
1512
Bigg-bossjulie
- Advertisement -

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்ட்டார் ஜூலி. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி பெயரெடுத்த கதை நாம் அனைவரும் அறிவோம்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். இருப்பினும் இவரின் மீது ரசிகர்கள் இன்னும் கடுபிடில் தான் இருக்கின்றனர். இதனால் இவர் சமூக வலைத்தளத்தில் என்ன பதிவு பதிவிட்டாலும் ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகிவிடுகிறார்.

- Advertisement -

சமீபத்தில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் ட்விட்டர் வாசிகளுக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் நம்மால் ஜீரணிக்க முடியாமல் இருந்தது. அவர் ‘தனது நெருங்கிய நண்பர் ஹம்ரான் மார்க்குடன் அந்தமானில் ஜாலியாக இருந்து வந்தேன்’ என்று பதிவிட்டிருந்தார். இதனால் ட்விட்டர் வாசிகள் காண்டாகி ஜூலியை கலாய்த்து தள்ளினார்.

இந்நிலையில் தற்போது ஜூலி , தனது நண்பர் ஹம்ரான் மார்க்குடன் BMW சொகுசு காரில் லாங் ட்ரைவிங் சென்றதாக ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், ஜூலி காரை ஓட்டாமல் சும்மா போஸ் கொடுத்து இருக்கிறார் என்று காரின் வேககாட்டியில் ‘ஸிரோ ‘ என்று காட்டியதில் அப்பட்டமாக தெரிந்தது.

-விளம்பரம்-

இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் ‘ஜீரோ கிலோமீட்டர் வேகத்தில கார் ஓட்டுன ஒரே ஆளு.நீதான் ஜூலி…’ என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement