பிக் பாஸ்ஸில் ரம்யாவா.!ரசிகரின் கேள்விக்கு லைவ் சாட்டில் அவரே கூறிய பதில்.!

0
712
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனுக்கான பணிகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்க இருக்கிறது.

-விளம்பரம்-

வழக்கம் போல இந்த சீசனையும் உலகநாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 ப்ரோமோ வீடியோக்களை விஜய் டிவி வெளியிட்டிருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்களை பற்றிய விபரம் விஜய் டிவி இன்னும் வெளியிடவில்லை.

- Advertisement -

இருப்பினும் சமூகவலைதளத்தில் போட்டியாளர்களை பற்றிய விவரங்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பி ஜே ரம்யா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக சில செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ரம்யா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்டார்.

அப்போது ரசிகர் ஒருவர் பிக் பாஸ் 3 யில் உங்களை பார்க்க மிகவும் ஆவலாக இருப்பதாகவும் பிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் சிறப்பான டிப்ஸ்களை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரம்யா ‘சீசன் ஒன்லையும் சொன்னேன் சீசன் இரண்டிலும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்,எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற எந்த விருப்பமும் இல்லை’ என்று தெள்ளத் தெளிவாக கூறிவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement