ரூமுக்கு வரியா, தெளிவா விளக்கி சொல்றேன். கேவலமாக பேசியதற்கு காஜல் கொடுத்த பதிலடி.

0
1821
- Advertisement -

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார். மேலும், சிங்கம். கோ. மௌனகுரு. கௌரவம். இரும்பு குதிரை கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அடிக்கடி ட்விட்டரில் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டு விடுகிறார். இந்த நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அலுவலகத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவரெல்லாம்,”தொழிலின் மீதான பற்றினால் அல்ல” என்பதை மணமுடித்த பின்புதான் புரிகிறது என்று பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு நடிகை காஜல், சில எமோஜியை போட்டு பதில் அளித்திருந்தார்.

- Advertisement -

காஜல் கமன்ட் செய்த இதே பதிவில், ட்விட்டர் வாசி ஒருவர், சிகை தொட நினைத்தவன்சிரம் விழும் தரையினில்ஈடிணை இல்லா வீரம்பல திசைகளும் திகைத்திடும் பார்ப்பவை பதைத்திடும்சரித்திரம் விழுந்திடும் வீரம்எறிதழலாய் நின்று எதிரிகள் அலறிடசமரினில் திமிரிடும் வீரம்பயம் எனும் சொல் இங்கு பரிட்சயம் இல்லையடா பரம்பொருள் வரம் தந்த வீரம்கடும்புனலே மோதவரும் என்று பதிவிட்டிருந்தார்.

ரசிகரின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்த காஜல், இந்த பதிவு தமக்கு புரியவில்லை என்று கூறியிருந்தார். அதற்கு இந்த பதிவை போட்ட அந்த நபர், ரூமுக்கு வா, உனக்கு விவரிக்கிறேன் என்று கேவலமாக கமன்ட் செய்து இருந்திருந்தார். அதற்கு பதில் அளித்த காஜல், போலீஸ் ஸ்டேஷனுக்கு நீ வரையாடா என்று கமன்ட் செய்து அந்த நபரை பிளாக் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement