பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் அவர்களின் திருமண சர்ச்சை தான் சமூக வலை தளத்தில் கடந்த சில நாட்களாகவே வைரலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. ரசிகர்களை தாண்டி பல்வேறு பிரபலங்களும் வனிதாவின் திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்களை வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வனிதா கலந்து கொண்ட அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற நடிகை கஸ்தூரி வனிதாவின் திருமணம் குறித்து வெளுத்து வாங்கியிருக்கிறார்.
வனிதாவின் திருமணத்திற்கு பின்னர் பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில் இது கண்டிப்பாக கபடம் தான் உங்களின் அனைத்து குடும்ப விஷயத்தையும் சமூகவலைதளத்தில் போட்டுவிட்டு பின்னர் அது உங்களுக்கு திரும்பியவுடன் இது எனது தனிப்பட்ட விஷயம் என்று கூறுவது என்ன நியாயம் சட்ட ரீதியாகவும் ஒருவரை பாதிக்காமல் இருக்கும் வரையில்தான் மற்றவர்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று பதிவிட்டிருந்தார்.
கஸ்தூரியின் இந்தப்பதிவு அனிதாவிற்கு தான் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள் அதேபோல வனிதாவும் கஸ்தூரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதுஇது என்றெல்லாம் பேசி இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கஸ்தூரி வனிதா குறித்தும் அவரது திருமணம் குறித்தும் வெளுத்து வாங்கியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் எவ்வளவோ சிகரெட் பிடித்தால் எவ்வளவு கெட்ட வார்த்தை பேசினார். ஆனால், அதை எல்லாம் காண்பிக்கவில்லை அவரை ஏதோ நல்லவர்கள் போல காண்பித்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், உங்களின் பெயரைச் சொல்லக்கூட எனக்கு பிடிக்கவில்லை உங்களுக்கு நீங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அவர்களெல்லாம் கெட்டவர்கள் தான் நீங்கள் செய்யும் தவறை தட்டிக் கேட்டால் அனைவரையும் நீங்கள் அசிங்கம் இல்லாதவர் என்று சொல்லுவீர்கள். அதேபோல உங்களை சிங்கம் என்று சொல்லாதீர்கள் இப்படி பேசுவது அசிங்கம் என்று கூறியுள்ளார்.