கமலிடம் மன்னிப்பு கேட்க சொன்ன லாஸ்லியாவின் தந்தை.! முடியாது என்று திமிர் காட்டிய லாஸ்லியா.!

0
4935
losliya-father

பிக் பாஸ் வீட்டில் தற்போது லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.

லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை திட்டும் போது இதுநாள் வரை அவருடன் இருந்த பாய்ஸ் கேங் யாரும் அவரது அருகில் கூட வரவில்லை. குறிப்பாக சாண்டி லாஸ்லியாவின் தந்தைக்கு வழிவிட்டு நகர்ந்து சென்றதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதே போல கவின் மீதும் லாஸ்லியாவின் பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் இருந்தது நேற்று தெளிவாக தெரிந்தது.

- Advertisement -

ஆரம்பத்தில் லாஸ்லியாவை கடுமையாக திட்டிய பின்னர் கொஞ்சம் கோபம் தணிந்து சமாதானம் ஆன லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவிற்கு கொஞ்சம் அறிவுரைகளை வழங்கினார். அப்போது கமல் சார் முன்னாடி நீ கால் மேல் கால் போட்டு அமர்வது தவறு, இதையெல்லாம் உனக்கு சொல்லி தரணுமா. அவர் எந்த இடத்தில் இருக்கிறார். அவரிடம் நீ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மரியாதை மனசில் இருந்தால் போதும், என்னை பற்றி எழுதறவங்க எழுதி கொண்டு தான் இருப்பாங்க. நான் வந்த நாள் முதலே நான் கால் மீது கால் போட்டு தான் பேசுகிறேன் என்று கூறினார் லாஸ்லியா. லாஸ்லியாவின் தந்தை சொன்னதை பலரும் ஏற்கனவே உணர்ந்துள்ளனர். ஆனால், தந்தை சொல்லியும் இதை கேட்காத லாஸ்லியாவை என்ன என்று சொல்வது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.