விஜய வச்சு படம் எடுத்தால் நஷ்டம் தான் – பிக் பாஸ் புகழ் ஆரத்தியின் நாகரீகமற்ற பேச்சு

0
5449
- Advertisement -

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர் விஜய். கடந்த 5 வருடங்களில் அவருடைய வளர்ச்சி அபிரிவிதமாக உள்ளது. சமீபத்தில் வெளியான மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாகி பல்வேறு தரப்பினரது பாராட்டினையும் பெற்று கமர்சியலாகவும் ஹிட் ஆகியது.
aarthi

இந்த சமயத்தில் நகைச்சுவை நடிகையும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் அடைந்தவருமான ஆர்த்தி சமூக வலை தளமான ட்விட்டரில் நாகரீகமற்ற முறையில் விஜயைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

தன்னை தல அஜித் அவர்களது ரசிகையாக காட்டிக்கொள்ளும் ஆர்த்தி சமீப காலமாக ரசிகை என்ற பெயரில் சமூக வலை தளங்களில் விஜய் ரசிகர்களுடன் வீண் சண்டை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

mersal

சமீபத்தில் விஜய் பற்றிய மறைமுகமாக ட்வீட் பதிவிட, உடனடியாக அதற்கு விஜய் ரசிகர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர், அதற்கு பதிலளித்தா ஆர்த்தி ‘பிடிக்கவில்லை என்றால் அன்-ஃபாலோ செய்துவிட்டுப் போ’ என பதிலிடுகிறார். அதற்கு அந்த விஜய் ரசிகர் ‘நான் ஃபாலோவே செய்யவில்லை’ என அவருக்கு மூக்குடையும் விதமாக பதில் அளிக்கிறார். இது அப்போது சமூக வலை தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் ஒரு சாதாரண ஒரு ரசிகர் போல, மக்கள் அறிந்த பிரபலம் அநாகரிகமாக தல அஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பெயரில் நேரடியாகவே விஜய்யைத் தாக்கி பேசி வருகிறார்.

“சுறா படம் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன்”, “அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கனே தெரியல” என பல்வேறு ட்விட்களில் ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.

இது போன்ற செயல்களை அஜித் மற்றும் அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

Advertisement