மீண்டும் தலைவர் ஆகிறார் மஹத் ! வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுவாரா..? பிக் பாஸ் ட்விஸ்ட்

0
289
mahat

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது மஹத் தான் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் அடுத்த வாரத்தின் தலைவராக மஹத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

Mahat-in-Bigg-Boss-House

இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் மூலம் மஹத் சிறந்த பர்பார்மராக தேர்தெடுக்கப்ட்டு பின்னர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தகவல் கிடைத்துள்ளது.இதன் மூலம் மஹத்திற்கு சூப்பர் பவர் கிடைக்கப்பெற்று அவர் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து காப்பற்றபட்டுவிடுவாரோ என்ற ஒரு எண்ணமும் தோன்றுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்வரை தலைவராக தேர்தெடுக்கம்படும் நபரை எந்த போட்டியாளரும் நாமினேட் செய்ய முடியாது. ஆனால், மஹத் இந்த வாரம் நாமினேஷனில் இருப்பதால் அவர் தலைவர் பதிவு மூலம் தன்னை காப்பற்றி கொள்வாரா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.

yashika-Anand

கடந்த இரு வாரத்திற்கு முன்னர் ஷாரிக் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது அவர் தான் அந்த வார தலைவராக தேர்தெடுக்கபட்டிருந்தார். ஆனால், அவர் அந்த வாரம் எலிமினேட் ஆனதால் தலைவர் பொறுப்பை ஐஸ்வர்யாவிற்கு கொடுத்துவிட்டு சென்றார்.

ஒருவேளை இந்த வாரம் மஹத் வெளியேறாமல் இருந்தால் அவர், அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றபட்டுவிடுவார். அதற்கு மாறாக அவர் இந்த வாரம் வெளியேறினால் கண்டிப்பாக தனது தலைவர் பதவியை யாஷிகாவிற்கோ அல்லது ஐஸ்வர்யாவிற்கோ தான் அளித்துவிட்டு செல்வார். இதனால் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் அடுத்த வாரம் காப்பற்றுபட்டு விடுவார்கள்.