விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.
பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகி இருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.
விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வந்தார் அசீம். இதனால் இவரை வெளியேற்ற வேண்டும் அடிக்கடி ட்விட்டரில் RedCardAzeem என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர் ரசிகர்கள். மேலும், அசீம் வென்றது தவறான உதாரணமான இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
— Vj_Maheswari (@maheswarichanak) January 23, 2023
அந்த வகையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் நிகழ்ச்சியின் படி அசீமிற்கு பட்டத்தை கொடுத்து இருக்கலாம். ஆனால், அதை அவரால் கொஞ்சம் கூட அனுபவிக்க முடியவில்லை. கண்டிப்பாக கமல் சார் இதை கனத்த இதயத்துடன் தான் செய்து இருப்பார். அதற்கு இந்த புகைப்படமே சான்று. என்னை பொறுத்த வரை விக்ரமன் மற்றும் ஷிவின் தான் வெற்றியாளர் என்று பதிவிட. இதற்கு மகேஸ்வரி உண்மை என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல வலைத்தளம் ஒன்றில் அசீம் வென்றது சமுதாயத்திற்கு ஒரு தவறான உதாரணம் என்று கட்டுரை ஒன்றை எழுதப்பட்டு இருந்ததையும் மகேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவாக pin செய்து இருக்கிறார் மகேஸ்வரி. அதே போல அஸீமிற்கு எதிரான பல பதிவுகளை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ – ட்வீட் செய்து வருகிறார் மகேஸ்வரி.