பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள். ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருக்கிறார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார்.
மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று பிரியங்காவுடன் தேவையில்லாமல் வேலைகளை செய்து கடந்த வாரம் நடந்த எழிமினேஷனில் அபிஷேக் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் நடந்த விஷயங்களை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் பொதுமக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.
பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து சொன்னது ஏன் :
நானும் மனிதன் தான். எனக்கும் வலி வேதனை எல்லாம் இருக்கு. தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள். அபிஷேக் எது பண்ணாலும் தப்பு என்று ஒரு பக்கம் மக்களால் பார்க்கப்படுவதால் தான் இந்த பிரச்சனை. ஆனால், இது உண்மை கிடையாது. நான் ப்ரியங்காவிடம் சொன்னேன், ஒருவேளை நம்ம பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூஞ்சை மாற்றினால் மக்களுக்கு பிடிக்குமா?நான் தான் வெளியே போக போறேன் என்று தெரியுது. அப்படி இல்லை என்றால் அடுத்த வாரம் வரும் எல்லா டாஸ்க்கிலும் உன்னை வெளுத்து வாங்கி தாறுமாறா கிழிப்பேன் என்று சொல்லி இருந்தேன்.
பிக் பாஸ் அல்டிமேட்டில் வைல்டு கார்டு ? :
அது எல்லோம் டிவியில் வரவில்லை. அது மட்டும் வந்து இருந்தால் மக்கள் மத்தியில் என் இமேஜ் வேற மாதிரி இருந்து இருக்கும் என்றும் கூறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தனது யூடுயூப் பக்கத்தில் எந்த வீடியோவையும் பதிவிடாமல் தான் வருகிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிஷேக் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அப்போது இன்ஸ்டாவாசி ஒருவர் ‘பிக் பாஸ் அல்டிமேட்ல வைல்டு கார்டு போட்டியாளராக போறதுக்கு வாய்ப்பு இருக்கா ‘ என்று கேட்டிருந்தார்.
அபிஷேக் சொன்ன பதில் :
அதற்கு பதில் அளித்த அபிஷேக் ‘ஆமா, இந்தவாட்டி சாக்கு மூட்டைல அனுப்பறாங்க. வெண்ணிலா (வனிதா) அக்கா உருட்டுகட்டையை கையில் வைத்துக்கொண்டு அத கிழிச்சி ஓப்பன் பண்ண கேட்பாங்க’ என்று பதில் அளித்துள்ளர். வனிதாவை போல அபிஷேக்கையும் எலிமினேஷன் பின்னரே ரசிகர்கள் மிஸ் செய்தனர். அதனால் தான் அவர் மீண்டும் வைல்டு கார்ட் போட்டியாளராக அழைத்து வரப்பட்டார்.
அபிஷேக் – வனிதா வார் எப்படி இருக்கும் :
ஒரு வேலை அபிஷேக் உள்ளே சென்றால் அவருக்கும் வனிதாவிற்கு கண்டிப்பாக எதாவது ஒரு பஞ்சாயத்து வந்து விடும். எனவே, அபிஷேக் செல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல பிக் பாஸ் அல்டிமேட்டில் 16 போட்டியாளர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 14 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மீதம் 2 போட்டியாளர்கள் விரைவில் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.