முதன் முறையாக நாமினேஷன் ஆன தன் அண்ணன் – ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட பதிவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
308
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தனது அண்ணன் முதல் முறையாக நாமினேஷனில் வந்திருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஐஸ்வர்யா ராஜேஷ் மக்களிடம் ஆதரவு கேட்டுப் போட்ட பதிவு ரசிகர்களால் பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படம் மூலம் ஐஸ்வர்யா பிரபலமான நடிகையாக திகழ்கிறார். மேலும், சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லி இயக்கியிருக்கிறார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்த படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால், இந்த படம் இன்று வெளியாகவில்லை. திடீரென படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்படி படங்களில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தனது அண்ணனுக்கு அதரவு கேட்டு ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார. பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 7 வாரங்களை கடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, ஷெரினா, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாஸினி ஆகியோர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் சமீபத்தில் நடைபெற்றது. அதுவும் இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் இந்த வாரம் நடைபெற்று இருந்தது. அதில் மணிகண்டன், கதிரவன், அமுதவாணன், ராம், ஆயிஷா, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் என்று ஏழு பேர் டாமினேட் ஆகியிருக்கிறார்கள்.

இதில் மணிகண்டன் முதன்முறையாக நாமினேஷனில் வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் மணிகண்டனின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், நாமினேஷனில் இருக்கும் தனது அண்ணனுக்கு ஆதரவாக தன்னுடைய twitter பக்கத்தில் மணிகண்டனுக்கு உங்களின் அன்பையும் ஆதரவையும் காமியுங்கள் என்று பதிவிட்டு தன் அண்ணனுக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பதிவை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

உங்கள் அண்ணன் உண்மையில் நன்றாக விளையாடினால் மக்கள் அவருக்கு வாக்களிக்க போகிறார்கள் உங்கள் அண்ணானுக்காக உங்கள் ரசிகர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கமண்ட் செய்து வருகின்றனர். மணிகண்டன் ஆரம்பத்தில் நடுநிலையாக தான் விளையாடி வந்தார். ஆனால், இவர் கடந்த சில வாரங்களாக மைனா மற்றும் ரச்சிதாவுடன் சேர்ந்துகொண்டு குரூப்பீசம் செய்து விளையாடித்தில் இருந்தே இவரது பெயர் டேமேஜ் ஆகி வருகிறது.

Advertisement