தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஏழு நாட்களை கடந்து இருக்கிறது.
Imagine Maya asking for a mask to Cool suresh and he picks and gives his underwear, just imagine what Drama Maya would have created.But she does this so its ok.
— $hyju (@linktoshyju) October 8, 2023
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பிக் பாஸ் 7:
மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதோடு கேப்டனால் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். மேலும், ஆரம்பத்தில் இருந்தே பிரதீப் ஆண்டனி-விஜய் வர்மா இருவருக்கும் செட் ஆகவில்லை. பின் விசித்திராவிற்கும் ஜோவிகாவிற்கும் இடையே நடந்த படிப்பு குறித்த சண்டைதான் ஹைலைட். அதேபோல் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மாயா கிருஷ்ணன் கருத்து சுதந்திரம், பெண்கள் என்றால் இப்படித்தான் என்று ஓவர் அல்டாப்பு செய்து கொண்டு இருக்கிறார்.
குறிப்பாக, இவர் விஜய் வர்மா உடன் செய்யும் சேட்டைகளுக்கு எல்லாம் அளவே இல்லை. தன்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று பிறப்போட்டியாளர்களிடம் இவர் சர்ச்சையில் சிக்கிருக்கிறார். குறிப்பாக கூல் சுரேஷிடம் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டுதான் சென்றார். இப்படி மாயா கிருஷ்ணன் நிகழ்ச்சியில் செய்யும் சேட்டைகள் அளவே இல்லாமல் போயிருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் செய்திருக்கும் செயல்தான் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது.
மாயா செய்த வேலை:
அதாவது, போட்டியாளர் நிக்சன் அவர் ரூமை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மாயாவிடம் மாஸ் போட்டு கொண்டு அமருங்கள் என்று சொல்லி இருக்கிறார். உடனே மாயா படுக்கையில் இருந்த தன்னுடைய உள்ளையாடையை எடுத்து காட்டுகிறார். இதை பார்த்த பக்கத்தில் இருந்த பூர்ணிமா சிரிக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே, இந்த செயலை ஒரு ஆண் செய்திருந்தால் என்னவெல்லாம் பேசி இருப்பீர்கள்.
நெட்டிசன்கள் கருத்து:
எவ்வளவு பெரிய பிரச்சினையை செய்திருப்பீர்கள். ஆனால், இப்போது அமைதியாக இருக்கிறீர்களே என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இதற்கு பலருமே பதில் கொடுத்து வருகிறார்கள்.மேலும், மாயாவின் செயலை கண்டித்து வருகிறார்கள். கண்டிப்பாக இது கமலின் பார்வைக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நாட்கள் செல்ல செல்ல மாயாவும், பூர்ணிமாவும் ரசிகர்கள் மத்தியில் தாங்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் சம்பாதித்த மொத்த பேரையுமே இழக்க வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.