இந்த முறையும் தப்பித்த மாயா – இறுதியில் இந்த வாரம் வெளியேறியது யார்?

0
507
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது மூன்றாம் வாரரத்தை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் அக்ஷயா, விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா விஷ்ணு, மாயா, பிரதீப் ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த மாயாவின் பெயர் இடம் பெற்று இருந்தது. எனவே அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் பவா செல்லத்துரை வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள் அன்று நிறைவடைந்து இருந்தது. அதில் நிக்சன், அக்ஷயா, மணி விசித்ரா,ஐசு,விஜய்,மாயா,பூர்ணிமா,வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். அதிலும் மாயா பூர்ணிமாவுடன் இருக்கும் ஐசுவே பூரணிமாவை நாமினேட் செய்து இருக்கிறார். கடந்தே வாரமே மாயா நாமினேட் ஆகி இருந்த போது அவருக்கு தான் பல தனியார் வலைதள ஓட்டிங் போலில் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது.

எனவே அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவா செல்லதுரை வெளியேறிய காரணத்தால் எலிமிநேஷன் இல்லை என்று அறிவிக்கபட்டது. எனவே, இந்த முறை அவர் வெளியேற்றப்படுவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரமும் மாயா காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் ஆளாக பிரதீப் காப்பாற்றப்பட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இரண்டாம் நபராக நிக்சன் காப்பற்றப்பட்டார். அவரை தொடர்ந்து மூன்றாம் நபராக மாயா காப்பாற்றப்பட்டு இருக்கிறார். என்னதான் மாயாவை பலர் வெறுத்தாலும் மாயா பிக் பாஸ் வீட்டில் கண்டன்ட் வழங்கும் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். அதனாலேயே அவர் இந்த வாரம் காப்பற்றப்பட்டு இருக்கிறார். மேலும், இந்த வாரம் கடைசி இடத்தில் அக்ஷயா, விக்ரம் மற்றும் வினுஷா தான் இருக்கின்றனர்.

எனவே இவர்கள் மூவவரில் யாராவது தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வாரம் முழுதும் வினுஷா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்த தடமே இல்லாமல் இருந்து வந்தார். பிக் பாஸில் வந்ததில் இருந்தே இவர் சமையலில் மட்டும் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். எனவே இந்த வாரம் அவர் தான் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement