பட வாய்ப்புகள் இல்லையா என்ன ? பிக் பாஸ் அபிராமி எடுத்த புதிய அவதாரம்.

0
47708
abhirami
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி அவர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
https://twitter.com/Abhiramivenk/status/1214861161071382528

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் இவருடைய படம் அமைந்தது. கடந்த ஆண்டு வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : தன்னை வெறுப்பவர்களுக்கு மோசமான விரலை காட்டி லிங்கா பட நடிகை பதிவிட்ட புகைப்படம்.

- Advertisement -

இந்த படத்தின் மூலம் இவருக்கு மீண்டும் மக்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது என்று சொல்லலாம். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்தை பாராட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரத்தில் அழகாக நடித்து இருந்தார். தற்போது நடிகை அபிராமி அவர்கள் புதிய அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளார் என்று சொல்லலாம். அது வேறு ஒன்னும் இல்லைங்க சென்னை-28, ஆரணிய காண்டம் போன்ற படங்களின் தயாரிப்பாளரும், பாடகருமான எஸ்பிபி சரண் இயக்கும் வெப்சிரிஸ்ஸில் நடிகை அபிராமி அவர்கள் இணைந்து உள்ளார். இதில் வெள்ளைபூக்கள் தேவ், இளவரசு, ஏ.எல்.அழகப்பன், ஜான் விஜய், வினோதினி என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தினைத் தொடர்ந்து அபிராமி அவர்கள் நடிகர் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்பதால் அபிராமி வெப் சீரியஸ் பக்கம் திரும்பி விட்டாரா என்றும் கிசுகிசுக்படுகிறது.

Image

-விளம்பரம்-

ஆனால், “துருவ நட்சத்திரம்” படத்தில் அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள். இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் தான் இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், இன்னும் வரவில்லை. இந்த படம் ஸ்பை த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட உள்ளதாக கூறுகிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement