அழகி பட்டம் பறிக்கப்பட்டது உண்மையா.! மீரா மிதுன் சொன்ன விளக்கம்.!

0
2387
Meera-Mithun
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கண்டன்ட் கொடுத்தது மீரா மட்டும் தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே மற்ற போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் மீரா. இருப்பினும் அப்போது மீராவிற்கு கொஞ்சம் மக்கள் ஆதரவு இருந்தது.

-விளம்பரம்-
Meera

ஆனால், சேரன் பிரச்சனைக்கு பின்னர் மீரா மிதுன் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதிலும் குறும்படம் போட்டுக்காண்பித்தும் தனது தவறை மீரா உணராமல் கடவுளுக்கு தெரியும் என்று ரஜினி வசனத்தை எல்லாம் பேசினார். இந்த நிலையில் பிரபல இந்து நாளிதழுக்கு மீரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது.

This image has an empty alt attribute; its file name is image-89.png

அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த தர்ஷனின் காதலி சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மீரா மிதுன் என்னுடைய பட்டத்தை யாரும் என்னிடம் இருந்து பறிக்கவில்லை. ஒரு பட்டத்தை பறிக்க வேண்டும் என்றால் இரண்டு வருடங்களுகுள் பறிக்கப்பட வேண்டும். ஆனால், நான் பட்டம் பெற்று 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, என்னிடம் மிஸ் சவுத் இந்தியா பட்டம் இன்னும் என்னிடத்தில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.


Advertisement