நடந்து முடிந்த நாமினேஷன்.! முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற நபர்.!

0
4700
Housemates

பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) பிக் பாஸின் 50வது நாளில் சாக்க்ஷி வெளியேற்றபட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களாக இருந்து வந்த சாக்க்ஷி ரகசிய அறையிலவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

This image has an empty alt attribute; its file name is image-59.png

ஆனால், அப்படி எதுவும் நடைபெறாமல் சாக்க்ஷி நேரடியாக வீட்டிக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த வாரம் ரகசிய அறை பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது சகோதரர் பாபி சிம்ஹா குறித்து பேசியுள்ள ரேஷ்மா.! என்ன கூறியுள்ளார் பாருங்க.! 

- Advertisement -

மேலும், இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு போட்டியாளராக வனிதா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் தலைவர் சாண்டயை நாமினேட் செய்ய முடியாது அதே போல புதிய போட்டியாளரான கஸ்தூரியையும் நாமினேட் செய்ய முடியாது என்று பிக் பாஸ் அறிவித்தார்.

-விளம்பரம்-

இன்று நடைபெற்ற நாமினேஷனில் யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை பார்க்கலாம்.

சாண்டி – அபி மற்றும் மது
தர்ஷன் – அபி மற்றும் முகென்
முகென் – சேரன் மற்றும் தர்ஷன்
ஷெரின் – கவின் மற்றும் முகென்
லாஸ்லியா – முகென் மற்றும் ஷெரின்
கவின் – அபி மற்றும் மது
மது – முகென் மற்றும் லாஸ்லியா
சேரன் – கவின் மற்றும் முகென்
அபி – கவின் மற்றும் மது
கஸ்தூரி – கவின் மற்றும் லாஸ்லியா

எனவே, இன்று நடைபெற்ற நாமினேஷனில் இருந்து நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். எனவே, இந்த வார எலிமினேஷன் மிகவும் போட்டியுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement